“ஒற்றுமையாக இருந்தால் கர்நாடகத்தைப் போல் வெல்லலாம்” – புதுச்சேரி காங்கிரஸாருக்கு தினேஷ் குண்டுராவ் யோசனை

புதுச்சேரி: “ஒற்றுமையாக இருந்தால் கர்நாடகத்தைப் போல் வெல்லலாம்” என்று புதுச்சேரி காங்கிரஸாருக்கு கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் யோசனை தெரிவித்தார். புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்பி அகில இந்திய தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்பி இன்று மாலை மாநிலத்தலைவராக வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் புதுச்சேரி பொறுப்பாளரும், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருமான தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், … Read more

தமிழக பரத நாட்டிய கலைஞருக்கு பிரதமர் புகழாரம்

புதுடெல்லி: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது: மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில் கதை சொல்லுதல் குறித்து விவாதித்திருந்தோம். அந்த நிகழ்ச்சியால் உத்வேகம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் ஆனந்தாசங்கர் ஜெயந்த், குழந்தைகளுக்காக பல்வேறு கதைகளை தொகுத்துள்ளார். இதன்மூலம் நமதுநாட்டின் கலாச்சாரம் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படும். கதைகளின் சில சுவாரசியமான காணொலிகளையும் அவர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்திருக்கிறார். தனது திறமையால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் ஆனந்தா சங்கர் … Read more

தருமபுரி | துயரம் மிக்க சூழலுக்கு இடையிலும் உறுப்பு தானம் அளித்த தொழிலாளியின் குடும்பத்தார்

தருமபுரி: தருமபுரியில் துயரத்தை மறைத்துக் கொண்டு, உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்த தொழிலாளியின் குடும்பத்தாருக்கு அரசு மருத்துவமனை நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் கண்ணு. இவரது மகன் தீப்பாஞ்சி(42). ஐடிஐ படித்துள்ள இவர் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். கடந்த 15-ம் தேதி நல்லம்பள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த தீப்பாஞ்சி மீது அவ்வழியே வந்த இருசாக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தீப்பாஞ்சி மயக்க … Read more

இந்தியா-வியட்நாம் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கமும் அளவும் மேம்பட்டுள்ளது: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: இந்தியா-வியட்நாம் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கமும் அளவும் மேம்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் பான் வான் கியாங், ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் வந்தபோது, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தளவாட ஆதரவு … Read more

சென்னையில் வெளுத்துவாங்கும் கனமழை – அடுத்த 3 மணிநேரத்துக்கு விட்டுவிட்டு பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாசாலை, கிண்டி உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. அரைமணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, அடுத்த 3 மணி நேரத்துக்குள்ளாக செங்கல்பட்டு, மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், திருக்கழுகுன்றம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, உத்திரமேரூர், செய்யூர், எழும்பூர், கிண்டி, மாம்பலம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் … Read more

‘குடும்பம், கட்சி, கூட்டணி’ – அகிலேஷ் யாதவின் ‘பிடிஏ’ஃபார்முலா குறித்து மாயாவதி விமர்சனம்

புதுடெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை தோற்கடிக்க அகிலேஷ் யாதவ் பரிந்துரைத்துள்ள ‘பிடிஏ’ ஃபார்முலா என்பது பரிவார், தள், அலையன்ஸ் (குடும்பம்,கட்சி, கூட்டணி) என்று பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். இதுகுறித்து உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘என்டிஏ’ (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) எதிர்கொள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் பரிந்துரைத்துள்ள ‘பிடிஏ’ என்பது இந்த கடினமான காலக்கட்டத்தில் அவர்களுக்கான … Read more

"ஒவ்வொரு வாரமும் திமுக அமைச்சர்களின் ஊழல் அம்பலம்'' – பொன்முடியை பதவி நீக்க கோரும் அண்ணாமலை

சென்னை: திமுக அமைச்சர் பொன்முடி வேண்டுமென்றே தமிழக அரசின் கருவூலத்துக்கு ரூ. 28.4 கோடிகளை இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக தமிழக பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அலமாரியில் இருந்து வெளியேறும் எலும்புக்கூடுகள் போல, திமுக … Read more

'வந்தே பாரத் ரயிலுக்கு டிக்கெட் வாங்கினேன்; பயணித்ததோ தேஜஸ் ரயிலில்' – பயணி ட்வீட்

புதுடெல்லி: ரயில் பயணி ஒருவர் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் வகையில் டிக்கெட் வாங்கியுள்ளார். ஆனால், அந்த ரயிலுக்கு பதிலாக வேறொரு ரயில் வந்ததாகவும். அதில் தான் பயணித்து இருந்ததாகவும் அந்த பயணி அதிர்ச்சி தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதோடு அந்த ரயிலில் கழிவறை மற்றும் மோசமான சேவையை ரயில்வே வழங்கியதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் டேக் செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றுள்ளது. … Read more

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு … Read more

இந்திய உளவு அமைப்பின் அடுத்த தலைவராக ரவி சின்ஹா நியமனம்

புதுடெல்லி: இந்திய உளவு அமைப்பான ரா-வின் அடுத்த தலைவராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ராவின் தற்போதைய தலைவரான சமந்த் கோயலின் பதவிக் காலம் இம்மாதம் 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதன் காரணமாக, அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், ராவின் அடுத்த தலைவராக ரவி சின்ஹாவை தேர்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதி ராவின் புதிய தலைவராக ரவி சின்ஹா பதவியேற்க இருக்கிறார். 1988-ம் ஆண்டு சத்தீஸ்கர் … Read more