போன்களுக்கு ஒரே வகையான சார்ஜர்: 10-ல் 9 இந்தியர்கள் விருப்பம்

சென்னை: இந்தியாவில் டிஜிட்டல் சாதன பயனர்களில் பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட் உட்பட அனைத்து சாதனங்களுக்கும் ஒரே வகையிலான சார்ஜர் கேபிள் வேண்டும் என விரும்புவதாக சர்வே மூலம் தெரியவந்துள்ளது. 10-ல் 9 இந்தியர்கள் ஒரே வகையிலான சார்ஜர் கேபிள் வேண்டும் என இதில் தெரிவித்துள்ளனர். இந்திய நாட்டில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட் அவசியம் இருக்க வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் இதனை உறுதி … Read more

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என கடந்த … Read more

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை கப்பலை வியட்நாமுக்கு பரிசளிக்கிறது இந்தியா

புதுடெல்லி: ஏவுகணையை ஏந்திச் செல்லும் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் கிர்பான்-ஐ, வியட்நாமுக்கு இந்தியா பரிசாக வழங்க உள்ளது. இரண்டு நாள் பயணமாக நேற்று புதுடெல்லி வந்த வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் பான் வான் கியாங், ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் வந்தபோது, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு … Read more

இதுவும் காலநிலை மாற்ற விளைவு: ஈரான் – ஆப்கன் இடையே வலுக்கும் தண்ணீர்த் தகராறு!

காபூல் – தெஹ்ரான்: ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் ஆற்றில் இருந்து ஈரானுக்கும் தண்ணீர் பாய்கிறது. இந்த நிலையில், நீரைப் பகிர்ந்து கொள்வதில் கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையேயும் ஏற்பட்ட விரிசல் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு வேண்டுமென்றே தங்களுக்கு தண்ணீர் வழங்குவதை தடுப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தலிபன்கள் அரசோ போதிய மழையின்மை மற்றும் ஆற்றில் நீரின் மட்டம் குறைவாக இருப்பதன் காரணமாக ஈரானுக்கு நீரை வழங்க முடியவில்லை … Read more

40 கி.மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம்: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில்தான் விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகிறது. ஆனால், இடைப்பட்ட பகுதிகளிலும் பலர் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற குற்றங்களைக் கண்காணித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மிக வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களைக் … Read more

கீதை பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது: காங்கிரஸ் – பாஜக இடையே வெடித்த வார்த்தைப் போர்!

புதுடெல்லி: மத்திய அரசின் காந்தி அமைதி விருதுக்கு கோரக்பூர் கீதா (Gita) பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்துக்காக காந்திய வழிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு கடந்த 1995-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசியம், இனம், … Read more

Google Bard AI Chatbot: சாதக, பாதகங்களும் சிறப்பு அம்சங்களும் – ஒரு தெளிவுப் பார்வை

சோறு வேண்டுமென்றால் விவசாயம் மற்றும் டெக்னாலஜி பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். சமீபத்தில், செயற்கை நுண்ணறிவைச் சுற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஓப்பன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய டால்-இ மற்றும் சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கம்பெனி தனது செயலி ஆபீஸ் 365-ல் உள்ள பிங் தேடுபொறியில் சாட்ஜிபிடி ஒருங்கிணைப்பு, கூகுள் கம்பெனி உருவாக்கிய BARD, செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் உள்ள முக்கியமான நிறுவனங்கள் என்றால் அது கூகுள், மைக்ரோசாப்ட், ஓப்பன் ஏஐ தான். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட … Read more

கும்மிடிப்பூண்டி அருகே மயானத்தில் அடிப்படை வசதி கோரும் இருளர்கள் – மயான அமைதியில் அதிகாரிகள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பூவலை கிராமத்தில், மயானத்துக்குச் செல்ல சாலை வசதி மற்றும் மயானத்தில் சுற்றுச்சுவர், எரிமேடை, தண்ணீர் வசதி இல்லாததால் இருளர் இன மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது பூவலை கிராமம். சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இக்கிராமத்தின் ஒரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அறியாமை இருளில் மூழ்கியுள்ள இம்மக்கள், மீன் பிடித் தொழிலாளர்களாகவும், விவசாய கூலி தொழிலாளர்களாகவும், … Read more

‘3-வது முறையாக ஐமுகூ ஆட்சி அமைக்க வாய்ப்பு’ – கபில் சிபல் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினை

புதுடெல்லி: சித்தாந்த ரீதியாக ஒன்றிணைந்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கபில் சிபல் தெரிவித்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணீஷ் திவாரி, பிரமோத் திவாரி ஆகியோர் பதிலளித்துள்ளனர். கபில் சிபல் கருத்து: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பின்னர் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலானது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதாக … Read more

ஸ்மார்ட்போன் பயனர்களின் தரவுகளை திரட்டுவதாக புகார் – ரியல்மி பதில் என்ன?

சென்னை: ரியல்மி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை அந்நிறுவனம் திரட்டி வருவதாக பயனர் ஒருவர் ட்விட்டரில் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்கென பிரத்தியேக அம்சம் ஒன்றை ரியல்மி பயன்படுத்தி வருவதாக சொல்லி, அந்த ஸ்க்ரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அது தொடர்பாக ரியல்மி எதிர்வினை ஆற்றி உள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய … Read more