குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் | டெல்லி வந்தடைந்தார் எகிப்து அதிபர் அல் சிசி
புதுடெல்லி: குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபர் அல் சிசி தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அல் சிசி இன்று (செவ்வாய்கிழமை) மாலை டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read more