ட்ரோன் கேமரா இயக்க விரைவில் தடை – திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தடை செய்யப்பட்ட இடங்களில் ட்ரோன் கேமராவை உபயோகித்து சமீபத்தில் வீடியோ படம் எடுக்கப்பட்டது. இது கோயில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என பலர் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் நேற்று திருமலையில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது: பாதுகாப்பு கருதி திருமலையில் இனி ட்ரோன் கேமராக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட உள்ளது. இது குறித்து விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும். பக்தர்களின் உடமைகளை பாதுகாப்பாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு … Read more