இந்தியாவின் மிக நீளமான டெல்லி-மும்பை விரைவு சாலை தயார்: விரைவில் திறந்து வைக்கிறார் பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான டெல்லி – மும்பை விரைவு சாலை பணிகள் நிறைவு பெற்று தயார் நிலையில் இருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் 2-வது மிகப்பெரிய சாலை போக்குவரத்தை கொண்ட இந்தியாவில் சாலை உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாள்தோறும் 37 கி.மீ. தொலைவுக்கு புதியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை 60 கி.மீ. ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 24 விரைவு சாலைகள் … Read more

வாழப்பாடி அரசுப் பள்ளி மாணவி இளம்பிறைக்கு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சார்பில் விருது

சேலம்: பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புப் போட்டியில், மூன்றாம் பரிசு பெற்ற வாழப்பாடி அரசு பள்ளி மாணவிக்கு, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்புக் கண்காட்சி மற்றும் போட்டி, டெல்லியில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து மாணவ, மாணவிகள் 576 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து, 13 பேர் கலந்து கொண்டனர். இதில், சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் … Read more

வின்ஸ்டன் சர்ச்சில் குறித்த உண்மையைச் சொல்ல பிபிசி-க்கு தைரியம் உள்ளதா? – திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் கேள்வி

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிராக பிரபல திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் ட்விட்டரில் நேற்று கூறியதாவது. கடந்த 1947-ம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் போது, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேசும்போது, இந்திய தலைவர்கள் அனைவரும் திறன் குறைந்தவர்கள், பலவீனமானவர்கள் என்று பேசினார். அவர் மீதும் பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பிரிட்டனின் நேசத்துக்குரிய தலைவர்களில் ஒருவரான வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிய உண்மைகளை சொல்ல பிபிசிக்கு எப்போதாவது தைரியம் இருந்ததா என்று … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஜன.25-ல் மநீம அவசர நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று (ஜன.23) நடந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக வரும் ஜன.25-ம் தேதி அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா மற்றும் ஆர்.தங்கவேலு கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 23.01.23 அன்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தின் தொடர்ச்சியாக … Read more

கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் ‘வகிர்’ சேர்ப்பு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

மும்பை: இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, கல்வாரி வகை நீர்மூழ்கியின் ஐந்தாவது கப்பலான ஐஎன்எஸ் ‘வகிர்’ திங்கள்கிழமை கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஐஎன்எஸ் ‘வகிர்’ பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மஸகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விழாவில், கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார் முன்னிலையில் கடற்படையில் வகிர் இணைக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்த நீர்மூழ்கி கப்பல், இந்தியாவின் கடல்சார் நலன்களை மேம்படுத்துவது, எதிரிகளைத் தடுப்பது, புலனாய்வு செய்வது, … Read more

பணி நீக்கத்தை தவிர்ப்பதில் தனி வழியில் ஆப்பிள் நிறுவனம் – எப்படி சாத்தியம்?

பொருளாதார ரீதியிலான மந்தநிலை காரணமாக உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆயிரக் கணக்கில் கூண்டோடு பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த பணி நீக்க நடவடிக்கை உலக மக்கள் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு செய்தியாகவே மாறிவிட்டது. இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் இதுவரையில் பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுக்கவில்லை. அது குறித்து அறிவிக்கவும் இல்லை. மற்ற நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வரும் சூழலில் ஆப்பிள் மட்டும் அதை … Read more

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஊதிய மறு சீரமைப்பு கோரிக்கை: 8 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய மறு சீரமைப்பு தொடர்பாக சர்க்கரைத் துறை கூடுதல் ஆணையர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளும், 22 தனியார் சர்க்கரை ஆலைகளும் இயங்கி வருகின்றன. தனியார் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் … Read more

லண்டன் | பட்டமளிப்பு விழாவில் கர்நாடகா கொடியேந்திய இந்திய இளைஞர்: வைரலாகும் வீடியோ

லண்டன்: லண்டனில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய மாணவர் ஒருவர் தான் சார்ந்த கர்நாடக மாநிலத்தின் கொடியை ஏந்தி தனது மாநிலத்திற்கு நன்றி தெரிவித்தார். அவரது இந்த செயல் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடக மாநில மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆதிஷ் ஆர் வாலி என்ற அந்த மாணவர் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறையில் எம்எஸ் பட்டம் பெற்றார். அவர் மேடையில் ஏறி தன்னுடைய பட்டப்படிப்புச் சான்றிதழை வாங்கும்போது கர்நாடக மாநில … Read more

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த புதிய சட்டம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கால அவகாசம்

சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த ஏதுவாக 1914-ம் ஆண்டு சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் … Read more

“ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும்” – ராகுல் காந்தி

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று ஜம்மு நகருக்குள் நுழைந்தது. அப்போது, ஏராளமானோர் கூடி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், ராகுல் காந்தியின் யாத்திரையில் இணைந்து அவர்களும் நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ”ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இம்மாநில மக்களின் மிகப் பெரிய … Read more