ஐடி நிறுவனங்களில் தொடரும் வேலை இழப்பு: நிலைமையை ஆராய மத்திய அரசுக்கு கேஜ்ரிவால் வேண்டுகோள் 

புதுடெல்லி: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்ளில் நிகழ்ந்து வரும் வேலை இழப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்தியாவில் சூழலை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சமீபகாலங்களில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தகவல் தொழில்வநுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு பணியாளர்களை பணியில் இருந்து விடுவித்து வருகிறது. இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் இந்தியில் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், “ஐடி நிறுனங்களில் இருந்து பெருமாளவிலான இளைஞர்கள் … Read more

கணக்குப் பாடத்தில் மோசம் என்றாலும் பேராசிரியர் வைத்த ‘எம்பிஏ தேர்வில் தேர்ச்சி’ பெற்ற ChatGPT!

வாஷிங்டன்: அமெரிக்க பேராசிரியர் ஒருவர் ChatGPT-க்கு வைத்த எம்பிஏ தேர்வில் அந்த சாட்பாட் தேர்ச்சி பெற்றுள்ளது. இருந்தாலும் கணக்கு பாடத்தில் கொஞ்சம் மோசம் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆய்விதழ் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ளார். இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலானவர்களின் பார்வையை பெற்றுள்ளது சாட் ஜிபிடி (ChatGPT). கதையை சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும். இருந்தாலும் இதில் கிடைக்கும் … Read more

மக்களுக்கு எது நல்லது பயக்கும் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்: ஈவிகேஎஸ் சந்திப்புக்குப் பின்னர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்த விஷயத்தில் நான் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. எனவே, நாங்கள் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். லாபத்தைப் பற்றி நினைக்காமல் மக்களுக்கு எது நல்லது பயக்கும் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யத்தின் … Read more

நேதாஜிக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இலக்கு ஒன்றுதான்: மோகன் பாகவத்

கொல்கத்தா: பாதைகள் வேறாக இருந்தாலும் நேதாஜி மற்றும் ஆர்எஸ்எஸ் இரு தரப்பின் இலக்கும் ஒன்றுதான் என்று மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் விழா நடைபெற்றது. இதில், அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மசும்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் சீருடையில் கலந்து கொண்டனர். மேலும், சீருடை அணிந்த தொண்டர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் … Read more

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை வெளியிடும் திட்டம்: ராமதாஸ் வரவேற்பு

சென்னை: “உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிடும் திட்டம் வரவேற்கத்தக்கது; தடையின்றி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை வழக்கு தொடுக்கும் பாமர மக்கள் … Read more

இந்த ஆண்டு குடியரசு தின விழா எப்படி இருக்கும்? – விரிவான தகவல்கள்

புதுடெல்லி: பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய குடியரசு தின விழாவாக இந்த ஆண்டு குடியரசு தின விழா இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது எவ்வாறு நடைபெற இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்ப்போம். சாதாரண மக்களுக்கு முதல் வரிசை: இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பம்சமாக பொதுமக்கள் பங்கேற்புடன் குடியரசு தின விழா என்பது கருப்பொருளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, குடியரசு தின விழாவின் … Read more

பாகிஸ்தானில் 22 மாவட்டங்களில் மின் தடை: 2021-க்குப் பிறகு மிகப் பெரிய பாதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 22 மாவட்டங்களில் பல மணி நேர மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அரசை விமர்சித்து காட்டமான பதிவுகள் பறந்தன. இந்நிலையில், மின் தடை குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பவர் க்ரிட்டில் இன்று காலை ஏற்பட்ட அலைவரிசை சரிவினாலேயே பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே, குவெட்டா எலக்ட்ரிக் சப்ளை … Read more

தமிழகத்தில் பொதுக் கழிவறைகளில் க்யூ.ஆர் கோடு மூலம் புகார் – 7,954 கழிப்பறைகள் குறித்து 1,25,906 பேர் கருத்துப் பதிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுக் கழிவறைகளிலும் க்யூ.ஆர் கோடு மூலம் கருத்து தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை QR Code அட்டைகள் பொருத்தப்பட்டுள்ள 7,954 கழிப்பறைகள் தொடர்பாக 1,25,906 பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்துள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களையும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நகரங்களாக மாற்றுவது அரசின் முதன்மையான குறிக்கோளாகும். தமிழகத்தில் உள்ள நகரங்களில், பொது … Read more

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாணவிகள் வழக்கு

புதுடெல்லி: அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுத அனுமதி பெற்றுத் தருமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில மாணவிகள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு முன் வந்தது. இந்த மனுவை விசாரிக்க மூன்று நபர் கொண்ட அமர்வை அமைப்பது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார். கடந்த 2022 அக்டோபரில் இதே வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

அமெரிக்க அதிபர் பைடன் இல்லத்தில் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலக்கட்டத்திலும், எம்.பியாக இருந்தபோதும் அவர் நிர்வகித்து வந்த முக்கிய ஆவணங்களை அரசு ஆவணக் காப்பக்கத்தில் ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அதிபர் வீட்டில் சோதனை நடந்துமாறு அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டதன் அடிப்படையில், எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் (குறிப்பாக 6 ரகசிய … Read more