குளிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச கம்பளி ஆடைகளை அளிக்கும் லக்னோ மால்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற வர்த்தக வளாகத்தை டாக்டர் அகமது ராசா கான் (யுனானி மருத்துவர்) நடத்தி வருகிறார். இந்த வளாகத்திலுள்ள ஒரு கடை, ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு ஏற்ற கம்பளி ஆடைகள், போர்வைகளை இலவசமாக வழங்கி வருகிறது இந்த அனோகா மால். கடந்த ஆண்டு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு இலவச ஆடைகள் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம்: அதிமுக அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக தொண்டர்கள் இன்று முதல் விருப்ப மனு படிவங்களைப் பெறலாம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் 23.1.2023 திங்கள் … Read more

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: பாரத் பயோடெக் நிறுவனம் 26-ம் தேதி அறிமுகம்

போபால்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி கரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது பூஸ்டர் தடுப்பூசியாகவும் போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதற்கு இன்கோவாக் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அனைத்து கட்ட பரிசோதனைகளும் … Read more

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்கொலை: போலீஸ் தகவல்

கலிபோர்னியா: கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டி ஷெரீட் ராபர்ட் லூனா கூறுகையில், “நிகழ்விடத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு சந்தேகத்துக்கு இடமான வேன் நின்றது. அந்த வேனை நாங்கள் சுற்றிவளைக்க முற்பட்டோம். அப்போது அந்த வேனிலிருந்து துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. வேனை திறந்து பார்த்தபோது அங்கு ஒரு நபர் இறந்து கிடந்தார். அவர் 72 வயதான ஹூ கான் ட்ரான் என்று … Read more

அனைவரும் ஒன்றிணைந்து நம் வழி தனி வழி என நிரூபிப்போம்: தேனியில் இபிஎஸ் பேச்சு

தேனி: அனைவரும் ஒன்றிணைந்து நம் வழி தனி வழி என நிரூபிப்போம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் நாளை கட்சி நிர்வாகிகளான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மற்றும் கூடலூர் நகர கழக செயலாளர் அருண்குமார் ஆகியோர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேனி வந்தார். இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்திற்கு … Read more

பிரதமர் குறித்த பிபிசி ஆவணப் படத்துக்கு 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்துக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பல்துறை பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தது. அதுபற்றியும், அந்த கலவரத்துக்கும் அப்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பது போன்றும் ‘இந்தியா – மோடி கொஸ்டியன்’ என்ற தலைப்பிலான ஆவணப்படத்தில் கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் 13 … Read more

அண்ணா பல்கலை. பருவத்தேர்வு முறைகேடு விவகாரம்: தவறு செய்த 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை: அண்ணா பல்கலை. பருவத்தேர்வு மறுமதிப்பீட்டில் தவறு செய்த 2 அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 510 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான பருவத்தேர்வு அண்ணா பல்கலை. சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 ஏப்ரல், நவம்பர் மாதங்களில் நடந்த பருவத் தேர்வுகளில் தோல்வி அடைந்த, குறைந்த மதிப்பெண் பெற்ற சுமார் 3 லட்சம் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததாகவும், … Read more

நாடாளுமன்றத்தில் நேதாஜி பிறந்தநாள் விழா 80 மாணவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் விழாவில் அரசியல் தலைவர்கள் மட்டும் பங்கேற்பார்கள். பிரதமர் மோடியின் அறிவுரையின்படி மாணவர்களும் பங்கேற்கும் நடைமுறை கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முதல் பின்பற்றப்படுகிறது. இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நாடாளுமன்றத் தின் மைய மண்டபத்தில் உள்ள நேதாஜியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்ய நாடு முழுவதும் இருந்து 35 மாணவிகள், 45 மாணவர்கள் என 80 … Read more

குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராமசபையில் விவாதிக்க வேண்டியது என்ன? – தமிழக அரசு விரிவான வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துகள் குறித்த அறிவுறுத்தல்களை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி, கிராம ஊராட்சியில் கடந்த ஆண்டு ஏப்.1 முதல் டிச.31 வரை பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவு அறிக்கை, கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல் … Read more

குருவாயூர் கோயிலிடம் 263 கிலோ தங்கம் ரூ.1,700 கோடி டெபாசிட்

திரிச்சூர்: கேரள மாநிலம் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு இதுவரை 263.637 கிலோ தங்கம், 20,000 தங்கத் தகடுகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர். மேலும், குருவாயூர் கோயில் பெயரில் ரூ.1,700 கோடிக்கு வங்கி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தவிர, 271.05 ஏக்கர் நிலம் கோயில் பெயரில் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முறையீடு செய்யப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more