புதுச்சேரியில் 10,500 காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு ஒப்புதல்: பாஜக தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகளில் 10,500 காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. புதுவை மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா சிறப்பு அழைப்பாளராக இதில் கலந்து கொண்டார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜே சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதுச்சேரியில் கடந்த … Read more

''அரசியல்வாதி போன்று செயல்படுவதை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்க்கவேண்டும்'': திருச்சி சிவா

மதுரை: ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியல்வாதி போன்று செயல்படுவதை தவிர்க்கவேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில், ‘அரசியலமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும்‘ எனும் தலைப்பில் சட்டத்துறை கருத்தரங்கம் மதுரையில் இன்று நடைபெற்றது. இதற்கு, திமுக சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ எம்பி தலைமை வகித்தார். இதில், பேசிய ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி, “விக்டோரியா மகாராணி ஆட்சி செய்த காலத்தில் அவர்களது ஏஜெண்டுகளாக … Read more

கூகுள் கிளவுட் புரோகிராமில் குறைபாடு: சுட்டிக்காட்டிய இந்திய ஹேக்கர்களுக்கு ரூ.18 லட்சம் சன்மானம்

சென்னை: அமெரிக்க டெக் நிறுவனமான கூகுள் அண்மையில் அந்த தளத்தில் இருந்த குறைபாட்டை (Bug) சுட்டிக்காட்டிய இந்தியாவை சேர்ந்த இரண்டு ஹேக்கர்களுக்கு ரூ.18 லட்சம் சன்மானம் வழங்கியுள்ளது. சங்க காலத்தில் புலவர்கள் தங்கள் திறனை கொண்டு பாடல் எழுதி, அதனை கொடையுள்ளம் படைத்த மன்னர்களிடம் காட்டி பரிசில் பெற்று செல்வார்கள் என பாடப்புத்தகங்களில் படித்துள்ளோம். இதுவோ டிஜிட்டல் காலம். அனைத்தும் இணைய மயமாகிவிட்ட சூழலில் பெரும்பாலான மக்கள் அதிகம் உலாவும் வலைதளங்களில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை … Read more

தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த எந்தவொரு திட்டத்தையும் திமுக இதுவரை செயல்படுத்தவில்லை: செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை: திமுக விடியல் ஆட்சி தருகிறேன் என்று சொல்லிவிட்டு விடியா ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. வாக்குறுதி கொடுத்த பென்ஷன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. வாக்களித்த மக்களுக்கு பரிசாக மின்சார கட்டண உயர்வை தந்துள்ளது என மதுரை மீனாம்பள்புரம் பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேச்சு. மதுரை – செல்லூர் மீனாம்பள்புரம் பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.. … Read more

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கிய மூத்த வழக்கறிஞர்

மதுரை: மதுரை சிறையில் செயல்படும் நூலகத்திற்கு சுமார் ஆயிரம் புத்தகங்களை மூத்த வழக்கறிஞர் சாமித்துரை வழங்கினார். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் நடந்த விழாவில், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில், சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் ஆகியோர் அவற்றை பெற்றுக்கொண்டனர். பின்னர் பாஸ்கரன் பேசியதாவது, “மதுரை மகத்தான ஊர். இங்குள்ள மத்திய சிறைத்துறை நிர்வாக முயற்சியில் கைதிகளின் மறுவாழ்வுக்கு நூலகம் ஒன்றை தொடங்கியுள்ளனர். நூல்கள் வாங்குவது, பராமரிப்பது என்பது சிரமமான … Read more

திருமகன் ஈவெரா மறைவு | ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து அவரது மகன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 5-ம் தேதி மாரடைப்பால் காலமானார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெராவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தார். திருமகன் ஈவெரா மறைவையடுத்து, … Read more

ஒற்றுமை யாத்திரை நடத்த இந்தியா என்ன உடைந்தா இருக்கிறது?- ராஜ்நாத் சிங் கேள்வி

இந்தூர்: ஒற்றுமை யாத்திரை நடத்த இந்தியா என்ன உடைந்தா இருக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இம்மாதத்துடன் இந்த யாத்திரை நிறைவடைகிறது. இந்நிலையில் இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பேசுகையில், “இந்தியாவில் வெற்றுப்புணர்வு மேலோங்கி இருக்கிறது என்று சிலர் கூறுவது நாட்டை இழிவுபடுத்தும் செயல். நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறி இந்திய … Read more

காய்றிகள் விலை உயர்வால் பொதுமக்கள் தவிப்பு – தோட்டக்கலைத்துறையின் புது விளக்கம்

மதுரை: தமிழகத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் அவற்றை அன்றாட சமையலில் பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் நேற்று கத்திரிக்காய் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், வெண்டைக்காய் ரூ.60 முதல் ரூ70 வரையிலும், பீர்க்கங்காய் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரையிலும், கேரட் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும் விற்றன. இதேபோல், பீட்ரூட் … Read more

அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு துருவ நட்சத்திரம் போன்றது – தலைமை நீதிபதி கருத்து

புதுடெல்லி: நமது அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்பது துருவநட்சத்திரம் போன்றது. அது, சட்டத்திற்கு விளக்கம் அளிப்பவர்களுக்கும் (interpreters) அதனை நடைமுறைப்படுத்துபவர்களுக்கும் பாதையில் தடங்கள் ஏற்படும்போது வழிகாட்டி, சரியான திசைகளைக் காட்டுகிறது என்று தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் சனிக்கிழமை நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "நமது அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்பது துருவநட்சத்திரம் போன்றது. அது, … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன. அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் … Read more