''உச்ச நீதிமன்றத்தைவிட உயர்வானது பிபிசி என்ற நினைப்பு சிலருக்கு இருக்கிறது'': கிரண் ரிஜிஜூ விமர்சனம்
புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தைவிட பிபிசி உயர்வானது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டது. இந்த ஆவணப்படங்கள் கண்ணியமானவை அல்ல என்று மத்திய வெளியறவு அமைச்சகம் விமர்சித்தது. இந்த ஆவணப்படங்களை ஆதரித்து சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் … Read more