‘மற்ற பிரதமர்களின் பங்களிப்பும் முக்கியம்; ஆனால்..’ – நேரு அருங்காட்சியக பெயர் மாற்றம் குறித்து சஞ்சய் ரவுத் கருத்து

புதுடெல்லி: “மற்ற பிரதமர்களின் பங்களிப்பைக் காட்டவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரினை மாற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். டெல்லி தீன் மூர்த்தி பவனில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மத்திய அரசு பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று மாற்றியுள்ளது. இதுகுறித்து சிவ சேனா உத்தவ் தாக்கரே அணி சிவ சேனா … Read more

200-வது நாள் | தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட கும்பகோணம் கரும்பு விவசாயிகள்

கும்பகோணம்: பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடர்ந்து 200-வது நாளாகக் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை … Read more

பிரிஜ் பூஷண் மீதான குற்றப்பத்திரிகையில் போட்டோ, வீடியோ ஆதாரங்களை இணைத்த டெல்லி போலீஸ்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், 6 பெண் புகார்தாரர்களில், 4 பேரின் புகார்களில் புகைப்பட, வீடியோ ஆதாரங்களை டெல்லி போலீஸ் இணைத்துள்ளது. இதில் 3 ஆதாரங்கள் பாலியல் துன்புறுத்தல்களுடன் தொடர்புடையவை. பிரிஜ் பூஷண் சிங் மீது இந்தியாவின் முன்னணி பெண் மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீஸ் வியாழக்கிழமை (ஜூன் 15) சுமார் 1500 … Read more

‘அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்’ – மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!

சென்னை: நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை – நீலாங்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் பேசுகையில், “வழக்கமாக நான் பட விழாக்களில் அதிகம் பேசி உள்ளேன். ஆனால், முதல் முறையாக இது போன்ற ஒரு நிகழ்வில் பேசுகிறேன். ஏதோ ஒரு … Read more

குஜராத் | மசூதிக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: போலீஸார் மீது கல்வீச்சு; ஒருவர் உயிரிழப்பு 

ஜூனகர்: குஜராத் மாநிலம் ஜூனகர் மாவட்டத்தின் மஜ்வாடி கேட் அருகே உள்ள மசூதி ஒன்றுக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை மோதல் ஒன்று ஏற்பட்டது. இதில் போலீஸார் மீது கல்வீச்சு சம்பவத்தில் பலர் காயமைடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். அதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”ஜூன் 14ம் தேதி, ஜூனகர்த் மாநகராட்சி சார்பாக, அங்குள்ள மசூதி ஒன்றுக்கு அதன் ஆவணங்களை ஐந்து நாட்களுக்குள், நகராட்சியின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் … Read more

தமிழக பாஜக மாநிலச் செயலாளர் சூர்யா கைது: அண்ணாமலை கண்டனம்

சென்னை: தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எல்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில் சூர்யா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக மாநிலச் செயலாளர் சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை … Read more

ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்து சேனா மனு

புதுடெல்லி: ஓம் ராவத் இயக்கத்தில் நேற்று வெளியான ஆதி புருஷ் படத்துக்கு எதிராக இந்து சேனா அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்து சேனா தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தப் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். … Read more

முதல் தொகுதி அணு ஆயுதங்கள் பெலாரஸுக்கு அனுப்பிவைப்பு: ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைன் போரில் தேவைப்படும்போது பயன்படுத்த ஏதுவாக முதல் தொகுதி அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்தப் போர் நீடித்து வருகிறது. அவ்வப்போது தாக்குதல்களை இருதரப்பும் தீவிரப்படுத்துகின்றன. அந்த வகையில் அண்மையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையான கக்கோவ்காவை ரஷ்ய படைகள் குண்டு … Read more

இலாகா மாற்றம் | முதல்வர் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமியிடம் ஒப்படைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதேநேரம் அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடரஎதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் 2011-15-ம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில், போக்குவரத்துத் துறையில் பல்வேறு பணிக்காக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் எழுந்தது. … Read more

ஐ.நா.வில் யோகா நிகழ்ச்சி – பிரதமர் மோடி பங்கேற்பு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைமையகத்தில் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் யோக அமர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். யோகா பயிற்சியால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 21-ம் தேதியை யோக தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட ஐ.நா. சபை, ஜூன் 21-ம் தேதி உலக முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படும் என்று … Read more