தனியார் சர்க்கரை ஆலை மோசடி: கும்பகோண விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: திருமண்டங்குடியில் 53-நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு 

சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜன.22-ம் தேதி முதல் ஜன.25 வரையிலான 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜன.21) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் … Read more

சென்னை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் ரூ.641 கோடியில் பையோ-மைனிங் முறை – தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை பயோ-மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகின்றன. பெருங்குடி குப்பை கொட்டும் கிடங்கில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகளை ரூ.354 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் … Read more

சென்னையில் நீருக்கு அடியில் மெட்ரோ சுரங்கம்: நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல்

சென்னை: சென்னையில் தண்ணீருக்கு அடியில் மெட்ரோ சுரங்கப் பாதை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி(CRZ) வழங்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மாநகரில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,200 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மாதவரம் முதல் … Read more

தை அமாவாசை | ராமேசுவரத்தில் புனித நீராட குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ராமநாதபுரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு புண்ணிய தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் கூடினர். அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பின், ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்று அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் இரண்டு மணி … Read more

சென்னை | பொது கழிவறைகளின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு

சென்னை: மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பொது கழிவறைகளை தனியாருக்கு வழங்கவும், பராமரிப்பின் தரத்தைப் பொறுத்து அதற்கான தொகையை வழங்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு பொது இடங்களில் 800 க்கும் மேற்பட்ட இலவச பொது கழிவறைகள் உள்ளன. மக்கள் அதிகம் கூடக்கூடிய சுற்றுலாத் தளங்கள் மட்டுமின்றி பேருந்து நிலையம், சந்தைப் பகுதி, போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பல்வேறு திட்டங்களில் ரூ.420 கோடிக்கு புதிதாக கழிவறைகளை … Read more

தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்கக்கூடாது – மாவட்ட நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: மாவட்ட நீதிமன்றங்கள் விசாரிக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், காலதாமதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது. கீழமை நீதிமன்றங்களில் நடத்தப்படும் சிவில் வழக்குகளை விரைந்து முடிக்க அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ”கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட சிவில் வழக்குகள் … Read more

7 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை உரிய காலத்திற்குள் தெரிவிக்காததால் ஏழு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றம் செய்தது மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரை ஒரே நேரத்தில் குண்டர் சட்டத்தில் அடைக்க கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஏழு பேர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிடுக: விஜயகாந்த்

சென்னை: “ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை திமுக அரசு உடனடியாக உயர்த்த வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பென்சனுடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மிக குறைவான பென்சனையே அவர்கள் … Read more

ஆளுநரின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது: சிபிஎம்

சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவியின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும், அடாவடித்தனத்திற்கும் பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று சிபிஎம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் சம்பந்தமாக முதலமைச்சரும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் மன்னிப்பு கோர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக கூட்டணி கட்சிகளை வெகுவாக … Read more