’எதிரி’ விவகாரம்: ஈரான் – தென்கொரியா மோதல்

தெஹ்ரான்: தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஈரானை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் “எதிரி” என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக தென்கொரியாவை சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அமீரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தென்கொரிய பாதுகாப்புப் படையினரிடம் நிகழ்வு ஒன்றில், தென்கொரிய அதிபர் யூன் சு- யோல் பேசும்போது, ”ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிரி ஈரான். மிகவும் அச்சுறுத்தல் கொண்ட நாடு ஈரான். எங்களின் எதிரி வடகொரியா.” என்று தெரிவித்தார். இந்த நிலையில் … Read more

12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: முதல்வருக்கு அன்புமணி கடிதம்

சென்னை: தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வருக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார் தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,”தமிழ்நாட்டின் வருவாய் நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதற்கான மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்து, தமிழக முதலமைச்சராகிய தங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். தஞ்சாவூர் மாவட்டத்தின் முதன்மை நகரங்களில் ஒன்றான கும்பகோணத்தை தலைமையிடமாகக் … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்திய முதலீடு அதிகரிக்கப்படும் –  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

புதுடெல்லி: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிக முதலீடு செய்யப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2-நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கொழும்புவில் நேற்று சந்தித்து பேசினார். அண்டை நாடுகளுக்கு முதல் முக்கியத்துவம் அளிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியுடன் இருப்பதால், தான் இலங்கைவந்திருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரி வித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை: பாமக

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் தலைமையில் கூடி விவாதித்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் … Read more

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட மாஸ்கோ – கோவா விமானம்

பானாஜி: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவா நோக்கி வந்த சார்ட்டர் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் உஸ்பெகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: “அஷூர் விமான போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் விமானம் (AZV2463) ஒன்று மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு கோவாவின் டாம்போலி விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்க வேண்டும். இந்த … Read more

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது: சென்னை மெட்ரோ ரயில் இயக்கம் சீரானது

சென்னை: தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் சென்னை மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (ஜன.21) காலை சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் வரையிலான … Read more

போலி ஸ்டிங் ஆபரேஷனா?- பாஜக விமர்சனத்திற்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் பதிலடி

புதுடெல்லி: டெல்லி சம்பவம் ஒரு போலி ஸ்டிங் ஆபரேஷன் என்று விமர்சித்துள்ள பாஜகவுக்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். இவர் அண்மையில் தனது ட்விட்டரில் “டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, போதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். காரில் தப்பிக்க முயன்ற அவரை பிடிக்க முற்பட்டபோது எனது கை அந்த காரின் ஜன்னல் … Read more

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் பரிசோதனை இன்று நிறைவு: இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும்

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்று வந்த உண்மை கண்டறியும் சோதனை இன்றுடன் நிறைவடைகிறது. அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்ததொழில் அதிபருமான ராமஜெயம்,2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சிசென்றபோது கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை தற்போது, சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கியசிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இதற்கிடையே, ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை … Read more

குஜராத் | சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி விரோதமாக செயல்பட்ட 38 பேர் காங்கிரஸிலிருந்து நீக்கம்

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட 38 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1,5 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவியது. மோடி அலையின் தாக்கத்தில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று 7வது முறையாக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி … Read more

மின்சார திருத்த சட்டத்தால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயராது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: மின்சார திருத்தச் சட்டத்தால் மாதம்ஒருமுறை மின் கட்டணம் உயராதுஎன மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள் ளார். திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகளுக்கான இரண்டாம் நாள் நேர்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். இதில், திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மின்சார திருத்தச் சட்டம் காரணமாக மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்படும் … Read more