குடியரசு தின கொடியேற்றுதலில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது – ஆட்சியர்கள் கண்காணிக்க தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை: குடியரசு தினத்தன்று, சாதிய பாகுபாடு ஏதுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கொண்டு தேசியக் கொடி ஏற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒருசில கிராம ஊராட்சிகளில் சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நான் எழுதிய கடிதத்தில், … Read more

6 காங்கிரஸ் அரசுகளை திருடிவிட்டது பாஜக – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

பதான்கோட்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. இந்த யாத்திரை நேற்று முன்தினம் பஞ்சாபில் நடைபெற்றபோது பதான்கோட் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. மக்கள் நலனுக்காக எதையும் சிந்திக்கவோ செயல்படுத்தவோ இல்லை. ஆறு காங்கிரஸ் அரசுகளை அவர்கள் திருடிவிட்டனர். எங் களுக்கு உத்தரவு வழங்கிய 6 மாநிலங்களை அவர்கள் … Read more

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.202 கோடியில் புதிய கட்டிடங்கள் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.202.08 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார். சென்னை மாநிலக் கல்லூரி, பாரதி மகளிர் கலைக் கல்லூரி, ராணிமேரி கல்லூரி, ஆர்.கே.நகர் அரசு கலை, அறிவியல் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, திருவள்ளுர் செவ்வாய்பேட்டை அரசு பாலிடெக்னிக், பொன்னேரி உலகநாத நாராயணசாமி, விழுப்புரம் அறிஞர் அண்ணா, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, … Read more

செகந்திராபாத் ஷாப்பிங் மால் தீ விபத்து – ட்ரோன் கேமரா மூலம் 3 உடல் கண்டுபிடிப்பு

செகந்திராபாத்: செகந்திராபாத் 5 அடுக்கு கொண்ட டெக்கான் மாலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு திடீரென கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 20 மணி நேரம் கழித்துதான் தீ கட்டுக்குள் வந்தது. அதற்குள் அந்த 5 அடுக்குமாடி முழுவதும் தீயால் சேதமடைந்தது. கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதையடுத்து சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டிடம் எந்த … Read more

ஏப்.14-ல் அண்ணாமலை நடைபயணம் தொடக்கம் – திருச்செந்தூரில் இருந்து தொடங்க திட்டம்

விருத்தாசலம்: ஆளுநர் விவகாரத்தில் மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடலூரில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபயணம் தொடங்க இருப்பதாக கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலச் செயலாளர் பி.செல்வம், பொருளாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். … Read more

மத்திய அரசுத் துறைகளில் பணியாற்ற நாடு முழுவதிலும் 71,000 பேருக்கு பிரதமர் மோடி நியமன ஆணை

புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற, நாடு முழுவதிலும் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆய்வு செய்த பிரதமர் மோடி, அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு … Read more

சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி துறையில் 130 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணிக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் இந்திய மருத்துவம் – ஓமியோபதி துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 1,541 சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுகள் உள்ளன. கரோனா தொற்றின்போது, சித்தா மருத்துவப் பிரிவுகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. … Read more

காவல் துறை வேலைவாய்ப்புகளில் போலீஸாரின் வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: தமிழக போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல் துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் மன உறுதி, விசுவாசம், நேர்மையை ஊக்கப்படுத்தும் வகையில், போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல்துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில், … Read more

கோவை | 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலம் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

கோவை: கோவையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.24.70 கோடி மதிப்புள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தை இந்துசமய அறநிலையத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள பரமேஸ்வரன்பாளையத்தில் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயி்ல் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான மொத்தம் 24.7 ஏக்கர் இடம், பரமேஸ்வரன்பாளையம் அருகேயுள்ள தேவராயபுரம் கிராமத்தில் 4 பகுதிகளாக அடுத்தடுத்துள்ளது. 4 இடங்களும் விவசாய நிலமாக இருந்தாலும், 2 இடங்கள் மட்டுமே முழு விவசாய பயன்பாட்டில் உள்ளது. … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இபிஎஸ் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது. … Read more