தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. … Read more

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை: பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஜூலை 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிராவில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்தார். சில நாட்களுக்கு முன்பு, சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு 38 சிவசேனா … Read more

உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாகத் திரும்பப் பெறுக: சீமான்

சென்னை: “மற்ற நாடுகளில் எல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது. ஆனால் உலக அளவில் அதிக ஜிஎஸ்டி விதிக்கும் நாடான இந்தியாவில் இன்றுவரை தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவது வரிவசூல் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைத்து முறைப்படுத்த தவறிய மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காரணமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை … Read more

காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025 | முதல்வர் தொடங்கி வைத்த டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? 

சென்னை: “காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025” என்னும் இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, நொச்சிக்குப்பத்தில், “காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025” என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு … Read more

அரசுப் பேருந்துகளில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி (44th Chess Olympiad – 2022) குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் … Read more

அனைத்து மக்களுக்கும் காப்பீடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தல்: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: ஏழை மக்களுக்கான காப்பீடு திட்டத்தை அனைத்து மக்களுக்கும் கிடைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் ரூ.500 கோடி நிதியை புதுச்சேரிக்கு தர அவரிடம் கோரியுள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினவிழா இன்று சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது. இந்திய சுகாதார ஆணையத்தின் பரிந்துரையின்படி 75வது ஆண்டு சுதந்திரத் திருநாள் … Read more

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாள் | முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு சால்வை அணிவித்து, புத்தகம் பரிசு வழங்கி முதல்வர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக … Read more

6 ஆண்டுகள் வரை நிலையான வருவாய் – விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பட்டன் ரோஜா: ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி விவசாயிகளுக்கு 6 ஆண்டுகள் நிலையான வருவாய் தரும் பட்டன் ரோஜா 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பட்டன் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. ஒருமுறை சாகுபடி செய்யப்பட்ட பட்டன் ரோஜா செடிகள் தொடர்ச்சியாக 5 முதல் 6 ஆண்டுகள் வரை நிலையான லாபம் கொடுப்பதால், இப்பகுதியில் பட்டன் ரோஜா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு … Read more

புதுச்சேரி அதிமுகவிலும் எதிரொலிக்கும் ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓம்சக்தி சேகர், அன்பழகன் போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாநிலச் செயலர்கள் இடையிலான பிரிவு வெளிப்படையானது. ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டியுள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த முறை நான்கு எம்எல்ஏக்களை அதிமுக வென்றிருந்தது. தற்போது நடந்த பேரவைத் தேர்தலில் ஐந்து இடங்களில் போட்டியிட்டு, அதிமுக அனைத்து இடங்ளிலும் தோல்வியடைந்தது. அதே நேரத்தில் அவர்கள் இடம் பெற்ற என்ஆர் காங்கிரஸ்-பாஜக அணி வென்று ஆட்சியமைத்தது.தற்போது புதுச்சேரியில் கிழக்கு மாநில செயலராக முன்னாள் எம்எல்ஏ அன்பழகனும், மேற்கு மாநிலச்செயலராக முன்னாள் … Read more

வர்த்தக முறைகேட்டில் ஈடுபடும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: முறைகேடான வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங், இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கத்தின் (ஐஏஎம்ஏஐ ) கீழ் இயங்கும், சுய ஒழுங்குமுறை அமைப்பான இந்தியா எட்-டெக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் IEC உறுப்பினர்களான பைஜூஸ், வேதாந்து, அப்கிரேடு, அன் அகாடமி, கிரேட் லேனிங், ஒயிட்ஹேட் ஜூனியர், சன்ஸ்டோன் மற்றும் … Read more