பொதுக்குழு சலசலப்புகளுக்கு இடையே அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் உச்சகட்ட சலசலப்புகளுக்கு மத்தியில், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் இன்று கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அவருக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பேசியது: “கடந்த 1972-ம் ஆண்டு, எம்ஜிஆரை திராவிட இயக்கத்திலிருந்து நீக்கியபோது, நான் ஓட்டிவந்த பேருந்தை சாலையிலேயே … Read more

'அழைப்பு வந்தது, அதனால் செல்கிறேன்' – டெல்லி புறப்பட்டுச் சென்ற ஓபிஎஸ்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணயின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவர் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்லம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, … Read more

'24 மணிநேரத்தில் மும்பை வந்தால் கூட்டணியில் இருந்த வெளியேற தயார்' – சிவசேனா அறிவிப்பு

மும்பை: 24 மணிநேரத்துக்குள் அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை வந்தால் மகாவிகாஸ் கூட்டணியிலிருந்து விலக தயார் என சிவசேனா அறிவித்துள்ளது. மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை 37 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்துள்ளனர். இவர்கள் அஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்களின் கோரிக்கையாக, சிவசேனா மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது இருக்கிறது. இந்தக் கோரிக்கை தொடர்பாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் … Read more

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-வது பிறந்தநாள் விழா: முதல்வர் வாழ்த்து

சென்னை: புதுக்கோட்டை சமஸ்தான மறைந்த மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-வது பிறந்த நாளையோட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மறைந்த மாமன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் 100வது பிறந்த நாள் விழாவையோட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மறைந்த மாமன்னர் ஸ்ரீ பிரகதாம்மாள் தாஸ் எச்.எச்.ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் (கி.பி. … Read more

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம்: தமிழிசை தொடக்கிவைத்தார்

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ சத்ய சாயி அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில், தினசரி காலை ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு குழந்தைகளுக்கு தரப்படும். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் துணை நிலை ஆளுநர் தமிழிசை இத்திட்டத்தை துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். கல்வியமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை கூறியது: “நான் சத்யசாய் பக்தை. … Read more

சென்னை பெரும்பாக்கத்தில் குப்பை மேடாக மாறிவரும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இடம் இப்போது குப்பை மேடாக மாறி வருகிறது. சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவததை தவிர்க்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தி குப்பை தரம் பிரித்து அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த மே 27-ம் தேதி முதல் ஜூன் 10-ம் … Read more

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி பள்ளியில் ‘காலை உணவு வங்கி’ தொடக்கம்

திருச்சி: தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வங்கி என்ற முன்னோடித் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. திருச்சி மாநகரில் மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மக்கள் பங்களிப்புடன் 2007-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 2018-ம் ஆண்டு முதல் காலை உணவாக இட்லி, இடியாப்பம், வெண் பொங்கல், … Read more

தெருவிளக்கில் படித்த ஏழை சிறுவன் – சொந்த செலவில் பள்ளியில் சேர்த்து உதவிய வாரணாசி போலீஸ் அதிகாரி

புதுடெல்லி: அரசு பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் நினைத்தால் ஏழை சமூகத்தை உயர்த்தலாம். இதற்கு உதாரணமாக உத்தரப்பிரதேசம் வாரணாசியில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான இங்கு காவல்துறை கூடுதல் ஆணையராக சுபாஷ் சந்திர துபே பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் இருட்டிய மாலைபொழுதில் பதனி கேட் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எடை பார்க்கும் இயந்திரம் ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொண்டு தெருவிளக்கு ஒளியில் சோனு எனும் சிறுவன் அமர்ந்து … Read more

என்எஸ்சி போஸ் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை பிராட்வே பகுதி நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காதவாறு அதிரடி சோதனை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை … Read more

சென்னை சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம்: முதற்கட்டமாக 80 சாலைகள் தயார்! 

சென்னை : சென்னை சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 80 சாலைகள் தயார் நிலையில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தி.நகரில் பல அடுக்கு வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதில் 246 கார்களையும், 562 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். இதனைத் தவிர்த்து சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. … Read more