கேரளாவை போல் உ.பி மாறினால்? – யோகிக்கு 'பட்டியலிட்டு' பதிலடி கொடுத்த பினராயி

திருவனந்தபுரம்: யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தை கேரளத்துடன் ஒப்பிட்டு நேற்று பேசிய நிலையில், தற்போது ’கேரளாவை போல் உத்தரப் பிரதேசம் மாறினால் என்ன நடக்கும்?’ என சில வரிகளில் பினராயி விஜயன் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், பாக்பத், காஜியாபாத், புலந்த்ஷார், அலிகார், மதுரா மற்றும் … Read more

உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான படைகளை ரஷ்யா குவித்து வருகிறது: அமெரிக்கா

உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான படைகளை ரஷ்யா குவித்து வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, “ கடந்த 24 மணி நேரமாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம். தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உக்ரைன் – எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் எல்லையில் படைகளை அதிகரித்து வருகிறார். … Read more

டிக் டாக்குக்குப் போட்டியாக யூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்

குறுங் காணொலி உருவாக்கும் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளுக்குப் போட்டியாக, யூடியூப் ஷார்ட்ஸ் என்கிற புதிய தளத்தின் பரிசோதனை வடிவம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே சந்தையில் டிக் டாக்குக்குப் போட்டியாக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனத்தின் யூடியூப் தளம் முயற்சி செய்து வந்தது. அதிகபட்சம் 15 விநாடிகளுக்குப் பயனர்கள் காணொலிகளை உருவாக்கும் வகையில் யூடியூப் ஷார்ட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்தப் பரிசோதனை வடிவில் ஒரு சில கூடுதல் அம்சங்கள் … Read more

நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில் அளிப்பதா? – இது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும்: கி.வீரமணி

சென்னை: நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில் அளிப்பதா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பது – வேற்றுமையில் ஒற்றுமையைக் குலைக்கும் – ஒருமைப்பாட்டையும் சிதறடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், ”அமைச்சர் பதில் அளிப்பது ஆங்கிலத்தில் … Read more

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை; ஜிடிபி 7.8 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி 

மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக தொடரும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. இதன்மூலம் தொடர்ச்சியாக 9வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடருகின்றன. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கூட்டம் … Read more

பில்கேட்ஸின் தந்தை காலமானார்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பில்கேட்ஸின் தந்தையுமான வில்லியம் ஹெச்.கேட்ஸ் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 94. வாஷிங்டன் ஸ்டேட் பகுதியில் இருக்கும் கடற்கரை இல்லத்தில் வில்லியம் வசித்து வந்தார். வழக்கறிஞரான இவர் சமூக ஆர்வலராகவும் இருந்து பல நல உதவிகளைச் செய்துள்ளார். அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த வில்லியமின் உயிர் நேற்று முன்தினம் அமைதியாகப் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தன் தந்தை குறித்துப் பகிர்ந்துள்ள பில்கேட்ஸ், ”என் தந்தையின் ஞானம், தாராள மனப்பான்மை, இரக்கம் … Read more

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: மார்ச் 5-ல் தீர்ப்பு

மதுரை: சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் மார்ச் 5-ல் மதுரை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், … Read more

உ.பி.யில் முதல்கட்டத் தேர்தல் தொடங்கியது: 58 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், … Read more

'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் ‘ஆப்பிள் ஒன்’ என்கிற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனம், டைம் ஃப்ளைஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. வழக்கமாக பொது மேடையில் நடக்கும் புதிய கருவிகளின் அறிமுக நிகழ்ச்சி இம்முறை இணையம் மூலமாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் புதிய ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிளின் புதிய சேவையான ஃபிட்னஸ்+ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ‘ஆப்பிள் ஒன்’. இந்த ஒரே திட்டத்தின் மூலம் ஆப்பிள் மியூஸிக், ஆப்பிள் … Read more

புதுக்கோட்டை பள்ளி சிறுவன் உயிரிழப்பு: பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எதிர்பாராத விதமாக உயிரிழந்த புதுக்கோட்டையை சேர்ந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், முதல்வர் ஸ்டாலின் சிறுவனின் பெற்றொர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. இவரது 9 வயது மகன் நிதிஷ்குமார் அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் பள்ளிக்குச்சென்ற சிறுவன் வகுப்பில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக ஆசிரியர்கள் … Read more