இலங்கை பொருளாதாரம் சீர்குலைவு | கச்சா எண்ணெய் வாங்க நிதி இல்லை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். அதன்பின், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இலங்கையின் நிதி அமைச்சர் பொறுப்பையும் விக்ரமசிங்கே வகித்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். நாடு மிகப்பெரும் கடன் சுழலில் சிக்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலா துறை வருமானமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கரோனா பாதிப்பு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக … Read more

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் – அருங்காட்சியகத்துடன் அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு

சென்னை: மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு புதுக்கோட்டை நகரில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான், தனது பதவிக் காலத்தில் மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். அரசுக்கு நிலம் வழங்கியவர் மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டையை முன்னேற்றும் வகையில், … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: நாளை திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல்

புதுடெல்லி: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வரும் 29-ம் தேதி கடைசி நாள் ஆகும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி … Read more

6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஆப்கானிஸ்தானில் 920 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 920 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று காலையில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவிக்கிறது. 600-க்கும் மேற்பட்டோர் காயம் இந்த நிலநடுக்கத்தால் கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் … Read more

மேகேதாட்டு அணை விவகாரம் | காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை – மத்திய அமைச்சரிடம் தமிழக தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. ஆணைய கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கக் கூடாது என்று மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் துரைமுருகன் தலைமையிலான தமிழக சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் குழு மனு அளித்துள்ளது. மேலும், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற … Read more

ஒடிசாவில் உள்ள சிவன் கோயிலை சுத்தம் செய்து வழிபட்டார் திரவுபதி முர்மு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணி வேட்பாளராக, ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரவுபதி, குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெறுவார். இவர் நேற்று காலை ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ராய்ரங்பூர் என்ற பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றார். அங்கு வழிபடுவதற்கு முன் கோயிலை தானே பெருக்கி சுத்தம் செய்தார். திரவுபதி முர்மு … Read more

சரக்கு போக்குவரத்துக்கு தடை விதித்த லிதுவேனியாவுக்கு ரஷ்யா எச்சரிக்கை – 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

மாஸ்கோ: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியிடம் இருந்து கலினின்கிரேடு பகுதியை ரஷ்யா தன் வசமாக்கி கொண்டது. எனினும், ரஷ்யாவுடன் இணைந்த ஒரே நிலப்பரப்பாக இல்லாத கலினின்கிரேடு பகுதி, நேட்டோ உறுப்பு நாடுகளாக உள்ள போலந்து – லிதுவேனியாவுக்கு இடையில் பால்டிக் கடல் பகுதியை ஒட்டியுள்ளது. கலினின்கிரேடு பகுதிக்கு லிதுவேனியா வழியாக ரயிலில் சரக்குப் போக்குவரத்தும் காஸ் குழாய்களையும் ரஷ்யா கொண்டு செல்கிறது. இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார … Read more

கோயில் நிலங்களை மீன்வளம், போக்குவரத்து துறைக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்ததில் தவறில்லை – தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களை மீன்வளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு மாற்றிய உத்தரவுகளை ரத்து செய்ததில் எந்தத் தவறும் இல்லை என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2.03 ஏக்கர் நிலத்தை அறநிலையத் துறையின் அனுமதியின்றி, 1963-ம் ஆண்டு மீன்வளத் துறைக்கு மாற்றப்பட்டு, அதன் ஒரு பகுதியில் ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் மீன்களைப் பாதுகாப்பதற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. … Read more

பிப்ரவரி 5-ல் முதன்முதலாக கணித்த ‘இந்து தமிழ்’ நாளிதழ் – ஆசிரியை பணி முதல் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வரை திரவுபதி முர்மு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, வேட்பாளராக்கப்படலாம் என உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் பிப்ரவரி 5-ல் முதன்முதலாக ‘இந்து தமிழ்’ நாளேடு கணித்து வெளியிட்டது. இது உண்மை எனும் வகையில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட பழங்குடி வகுப்பின் முர்மு, பல முக்கியத்துவங்கள் பெற்றுள்ளார். மத்தியில் பிரதமராக நரேந்திர மோடி 2014-ல் பதவி ஏற்றது முதல் அவரது அரசின் பல முக்கிய நடவடிக்கைகளை பத்திரிகையாளர்களால் கணிக்க முடியாமல் இருந்தது. இப்பட்டியலில் பண … Read more

தமிழகத்தில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 23-ம் தேதி தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். Source link