மகாராஷ்டிர நெருக்கடி | அதிருப்தி எம்எல்ஏக்கள் 34 பேர் ஆளுநருக்கு கடிதம் – சட்டப்பேரவையை கலைக்க உத்தவ் தாக்கரே முடிவு?

மும்பை: எனது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்துள்ளேன். எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யத் தயார் என்று மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இதனிடையே ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு சிவசேனா கட்சி, சுயேச்சை உள்ளிட்ட சேர்ந்த 34 அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் அசாமில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற … Read more

'ஒற்றைத் தலைமை பற்றி ஆலோசிக்க கூடாது' – மேல்முறையீட்டு வழக்கில் நிபந்தனைகளுடன் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தணிகாச்சலம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி … Read more

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடகா விண்ணப்பம் நிராகரிப்பு – மேலாண்மை ஆணைய கூட்டம் தள்ளிவைப்பு

பெங்களூரு: மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான இறுதி திட்ட வரைவு அறிக்கையில் எல்லைகளை இறுதி செய்து தாக்கல் செய்யாததால், அனுமதி கோரும் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நீக்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான முதல்கட்ட திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்தது. இதில் 5,252 ஹெக்டேர் பரப்பளவில் அணை கட்டப்பட இருக்கிறது என … Read more

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது – ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற திட்டம்

சென்னை: ஒற்றைத் தலைமை பிரச்சினையால் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில், அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று கூடுகிறது. கூட்டத்துக்கு தடை கோரிய இடைக்கால மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சில மாதங்களாக ஒருங்கிணைப்பாளர்கள் முதல் கிளை செயலாளர் வரையிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை, கட்சியின் பொதுக்குழுவில் … Read more

அறந்தாங்கி பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுமா?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக நகராட்சியாகவும், மக்கள்அதிகம் கூடும் இடமாகவும் இருப்பது அறந்தாங்கி. இது பேரூராட்சியாக இருந்தபோது, 1971-ல் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கிருந்து குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அறந்தாங்கியில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சிதம்பரம், திருச்செந்தூர், … Read more

மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி: குடும்பத்துடன் அரசு பங்களாவை காலி செய்த முதல்வர் உத்தவ் தாக்ரே

மும்பை: மகாராஷ்டிராவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தனது குடும்பத்துடன் முதல்வரின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு தனது சொந்த வீடான ‘மாடோஸ்ரீ’க்கு திரும்பியுள்ளார். சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சித் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, சமீபகாலமாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்துவந்தார். கடந்த திங்கட்கிழமை நடந்த சட்ட மேலவைத் தேர்தலில் சிவசேனா கட்சியின் 12 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல 3 … Read more

புதுச்சேரியில் நூறு நாள் பணியில் ஈடுபட்ட 30 பெண்களைக் கொட்டிய விஷக் குளவிகள்: 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் 100 நாள் வேலை திட்டப் பணியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களை விஷக் குளவிகள் கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஏரிப்பாக்கம் நத்தமேட்டில் காளி கோயில் அருகே உள்ள குளத்தை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு இருந்தனர். ஏரி மற்றும் … Read more

“செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வியாபாரமாவதை தடுக்க நடவடிக்கை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சேலம்: “செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வியாபாரமாவதைத் தடுக்கும் நடவடிக்கையாக சென்னை, திருச்சியில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்” என்று மருத்துவத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்தார். சேலத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 27-வது இளங்கலை மருத்துவப் பட்டமேற்படிப்பு நிறைவு விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: ”சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு – இரவே விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இரவே விசாரணை செய்யப்படவுள்ளது. அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் … Read more

'மருந்துகளில்லை, குறைதீர் கூட்டமில்லை' – நிர்வாக குறைபாட்டை கண்டித்து ஜிப்மர் மருத்துவ பேராசிரியர்கள் போராட்டம்

புதுச்சேரி: மருந்துகள் இல்லை, குறைதீர் கூட்டம் நடத்துவதில்லை, மோசமான நிர்வாகம் என அடுக்கடுக்காக பிரச்சினைகளைத் தெரிவித்து, போராட்டம் நடத்தப் போவதாக மருத்துவ பேராசிரியர்கள் ஜிப்மர் இயக்குநருக்கு ஆறு பக்கத்துக்கு கடிதம் அளித்துள்ளனர். முதல்கட்டமாக வரும் 24-ம் தேதி நிர்வாக அலுவலகம் முன்பு அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த … Read more