சென்னை மழை: 19 இடங்களில் தண்ணீர் தேக்கம்; 37 மரங்கள் விழுந்தன 

சென்னை: கடந்த 3 நாட்களாக சென்னையில் விட்டு விட்டு பெய்யும் கனமழை காரணமாக சென்னையில் 19 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன; 37 மரங்கள் விழுந்துள்ளன. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் கனமழை பெய்கிறது. இந்நிலையில், இந்த மழை காரணமாக சென்னையில் 19 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. 37 மரங்கள் விழுந்துள்ளன. மாதவரம் மண்டலத்தில் 24 வது வார்டில் சூரப்பேட்டை, 26 வது வார்டில் ஜிஎன்டி சாலை, … Read more

இலங்கை நபர்கள் இருவரின் தண்டனைக் காலம் குறைப்பு: இந்தியாவை விட்டு வெளியேறவும் உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை மறுகட்டமைக்க முயன்றதாக கைதான இலங்கை நபர்களின் தண்டனை குறைக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையானதும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்தவர்கள் சுபாஷ்கரன், கிருஷ்ணகுமார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள். இவர்களை 2015-ல் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிலையம் அருகே கியூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர். அப்போது இருவரிடம் இருந்து சயனைட் குப்பிகள், சேட்டிலைட் போன், செல்போன், சிம்கார்டுகள், இந்திய பணம், … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடையில்லை என்றும், திட்டமிட்ட பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் … Read more

14 நாட்கள் பேட்டரி லைஃப் கொண்ட Mi ஸ்மார்ட் பேண்ட் 7 அறிமுகம் | விலை and சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் ஜியோமியின் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் குறித்த சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம். கடந்த மே மாதம் சீன தேசத்தில் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இப்போது ஐரோப்பாவிலும் இந்த பேண்ட் அறிமுகமாகி உள்ளது. கூடிய விரைவில் இந்திய சந்தையிலும் இந்த பேண்ட் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் … Read more

“மாணவர்களைக் கையாள்வது கத்தி மேல் நடப்பதுபோல் சவாலானது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு

மதுரை: “மாணவர்களை கையாள்வது என்பது தற்போது கத்தி மேல் நடப்பதுபோல் இருக்கிறது. அதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும், தாயாகவும் இருந்து வழிநடத்தினால்தான் மாணவர்களை ஒழுங்குபடுத்த முடியும்” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பில்லர் மையத்தில் புதன்கிழமை பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் நடைபெற்றது. இதற்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க. நந்தகுமார் முன்னிலை வகித்தார். … Read more

மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகக் குழு கோரிக்கை

சென்னை: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் கர்நாடக அரசு எந்த ஓர் அணையும் கட்ட முடியாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற அனைத்து கட்சிக் குழு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டக் … Read more

பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் ஐபோன் 13 புரோ வாங்க முடிவு: டெண்டர் அழைப்பு வெளியீடு

பாட்னா: பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் ஐபோன் 13 புரோ: 256 ஜிபி மெமரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான டெண்டருக்கான அழைப்பை இப்போது வெளியிட்டுள்ளது நீதிமன்றம். பிஹார் மாநிலத்தில் பிரிட்டிஷ் கால ஆட்சியில் இருந்தே இயங்கி வருகிறது இந்த நீதிமன்றம். தற்போதைய தலைமை நீதிபதியாக சஞ்சய் கரோல் செயல்பட்டு வருகிறார். சுமார் 30-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நீதிபதிகள் அனைவருக்கும் ஐபோன் 13 புரோ … Read more

அக்னி பாதை திட்ட எதிர்ப்பு: கோவையில் இந்திய ஜனநாயக மாணவ சங்கத்தினர் போராட்டம்

கோவை: அக்னி பாதை திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டிஒய்எஃப்ஐ) கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் … Read more

மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி | “ராஜினாமா செய்யத் தயார்” – முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கியுள்ளதால், மகாராஷ்டிர மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தான் ராஜினாமா செய்யத் தயார் என்று அம்மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சரத்பவாரும், கமல்நாத்தும் தன்னை தொடர்புகொண்டு பேசியதாகவும், முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஏக்னாத் ஷிண்டேவுடன் சென்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவர்கள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் … Read more

நடைமேடைகளில் மேற்கூரை இல்லாத அரியலூர் ரயில் நிலையம்: வெயில், மழை நேரங்களில் அவதிக்குள்ளாகும் பயணிகள்

அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான நடைமேடைகளில் மேற்கூரைஅமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் தமிழகத்துக்கு இயக்கும் ரயில்களில் பெரும்பாலானவை அரியலூர், திருச்சி,மதுரை வழியாக செல்கின்றன. அரியலூர் ரயில் நிலையத்தில் மொத்தமுள்ள 4 நடைமேடைகளில் 4-வது நடைமேடை வழியாக சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. எஞ்சிய3 நடைமேடைகளில், 1, 2 ஆகியவற்றில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ரயில்களும், 3-ல் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் ரயில்களும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் … Read more