ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,000 ஆக அதிகரிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று (புதன்கிழமை) காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 1000 பேர் வரை பலியானதாகவும், 1,500 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் … Read more

மூத்த பத்திரிகையாளர் பிரியா கல்யாணராமன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “மூத்த ஊடகவியலாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். முப்பதாண்டுகளாக குமுதம் இதழில் பணியாற்றி வரும் அவர் பல நூல்களை எழுதியிருப்பதுடன், பல எழுத்தாளர்களையும் ஊக்குவித்தவர் என்பதை ஊடக உலகினர் நன்கறிவார்கள். குமுதம் … Read more

‘பிகில்’ படத்துக்கு ரூ.113 கூடுதல் கட்டணம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7,000 வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’படத்துக்கு தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் ரூ.7 ஆயிரம் வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக கடந்த 18.10.2019 அன்று ஆன்லனைில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். சென்னை அயனாவரம் பகுதியில் கோபிகிருஷ்ணா திரையரங்கில் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக … Read more

கோயிலுக்குச் சொந்தமான 28,000 ஏக்கர் நிலங்களைப் பாதுகாக்கக கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: வேதாரண்யம் வேதபுரீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான 28 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை பாதுகாக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அருள்மிகு வேதபுரீசுவரர் கோயிலுக்குச் சொந்தமாக 28,609.06 ஏக்கர் நிலம் இருப்பதாக அரசு மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால் அவற்றில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்து … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேவாரம், திருவாசகம் பாடினர்

கடலூர்: இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவின்படி சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடினர். சிதம்பரம் நடராஜர் கோயில் ஒவ்வொரு காலபூஜையின் போதும் கனகசபையில் ஏறி 30 நிமிடம் தேவாரம், திருவாசகம் பாடிட இந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் நேற்று (ஜூன்.21) உத்தரவிட்டார். மேலும், அந்த உத்தரவில் கோயில் நிர்வாகத்தினரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்பு இதர பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கட்டணம் எதுவும் … Read more

“வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 50 கிமீ பயணிப்பது மக்களுக்கு விதிக்கப்படும் தண்டனை” – ராமதாஸ்

சென்னை: “வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பது நியாயமல்ல… அது மக்களுக்கு விதிக்கப்படும் தண்டனையாகவே பார்க்கப்படும். புதிய மாவட்டங்கள், வட்டங்கள் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக புதிய மாவட்டங்கள், வட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் தமிழக அரசால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்த கோரிக்கைகளை … Read more

குஜராத் டூ அசாம்… ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே ‘முகாம்’ – மகாராஷ்டிர அரசுக்கு வலுக்கும் நெருக்கடி

மும்பை: தனது ஆதரவாளர்களுடன் குஜராத் மாநிலத்தில் முகாமிட்டிருந்த ஏக்நாத் ஷிண்டே தற்போது ஆதரவாளர்களுடன் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிக்கிறார். சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சித் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, சமீபகாலமாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்துவந்தார். கடந்த திங்கட்கிழமை … Read more

மேகதாது விவகாரத்தில் மீண்டும் ஒரு வெளிப்படையான விவாதம் வேண்டும்: தமிழிசை

புதுச்சேரி: “மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக மீண்டும் வெளிப்படையான விவாதம் வேண்டும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அரசு கடிதம் அனுப்பியுள்ளது” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 75 இடங்களில் சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டது. பெரிய மார்க்கெட் பகுதியில் நடந்த தூய்மைப் பணியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை குப்பைகளை அள்ளி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியது: “அனைவரும் … Read more

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 280 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 280-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் … Read more

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு பாமக ஆதரவு

சென்னை: பாஜக கூட்டணி சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் பழங்குடியினராக களம் இறக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு தமிழத்திலிருந்து பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவும் நேற்று மாலை தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் … Read more