லாலு கட்சி எம்எல்ஏவுக்கு 10 ஆண்டு சிறை – ஏகே 47 ரக துப்பாக்கி வழக்கின் தீர்ப்பால் பதவி இழக்கும் அபாயம்

புதுடெல்லி: ஏகே-47 ரக துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பான வழக்கில் பிஹாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவான அனந்த் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. பிஹாரில் குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதியாக இருப்பவர் அனந்த் சிங். ஐந்தாவது முறையாக மொகாமா தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் இவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு … Read more

தமிழகத்தின் ஒருசில இடங்களில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 22 முதல் 25-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல்மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 21-ம் தேதி காலை 8.30 மணியுடன் … Read more

அக்னி வீரர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து

புதுடெல்லி: அக்னி வீரர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: போர் சூழல் என்பது முழுமையாக மாறிவிட்டது. நேருக்கு நேர் போரிடும் சூழல் மாறி கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருந்து போர் நடைபெறுகிறது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் நடைபெறுகிறது. இன்றைய போரில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. காலத்துக்கு ஏற்ப இந்தியாவும் மாற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக … Read more

உக்ரைன் அகதி குழந்தைகளுக்கு உதவ நோபல் பரிசை ஏலம் விட்டு ரூ.808 கோடி வழங்கிய ரஷ்ய பத்திரிகையாளர்

மாஸ்கோ: ரஷ்யாவைச் சேர்ந்த டிமித்ரி முரடோவ் (60) என்பவர் நோவாயாகாஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையான சுமார் ரூ.3.80 கோடியை மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக வழங்கினார். இதனிடையே உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பல … Read more

முதல்வர் தலைமையில் ஜூன் 27-ல் அமைச்சரவை கூட்டம் – ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து முக்கிய முடிவு

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதில், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், புதிய தொழில் திட்டங்கள் மூலம் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. தொழில் தொடங்க வருவோருக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்குதல், பல்வேறு … Read more

ஆந்திராவில் 55 வயதில் அரசு ஆசிரியர் ஆன பிச்சைக்காரர்

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பழையபட்டினம் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால், அந்த ஆண்டு தேர்வு ஆனவர்கள் யாரும் அரசு ஆசிரியர் ஆக முடியவில்லை. இவ்வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, கேதாரேஸ்வர் ராவ் சைக்கிளில் ஊர் ஊராக சென்று துணிகளை விற்க தொடங்கினார். ஏழ்மை இவரை வாட்டியது. இவர் அணிய … Read more

அதிமுக – தமிழகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?

இந்திய அரசியலில் காங்கிரஸ் எந்த அளவுக்கு அவசியமோ, அதற்கு சற்றும் குறையாமல் தமிழக அரசியலில் அதிமுக மிகவும் தேவை. நமது நாட்டில் சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்கணக்கான கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. சுதந்திரா கட்சி – தொலைநோக்கு கொள்கைகளை முன்வைத்து, இந்தியாவுக்கு முற்றிலும் புதிய தளத்தில் செயல்பட்ட கட்சி. ஒருசில ஆண்டுகளுக்கு, ஓரிரு மாநிலங்களில் மட்டும் சற்றே செல்வாக்குடன் இருந்து, பிறகு சிறிது சிறிதாகக் கரைந்து காணாமல் போனது. ஆரோக்கியமான அரசியலை … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டி – எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க, பாஜகவின் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய … Read more

“ஆரோக்கிய உடலும், நிலையான மனமும் யோகாவின் சாராம்சம்” – மத்திய இணையமைச்சர் ஏ.நாராயணசாமி

சென்னை: “ஆரோக்கியமான உடல், நிலையான மனம், ஒருமித்த உணர்வு என்பவை யோகாவின் சாராம்சம்” என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை இன்று (ஜூன் 21) தொடங்கிவைத்து மத்திய இணையமைச்சர் ஏ.நாராயணசாமி பேசியது: ”தியானம், கர்மா, பக்தி ஆகியவற்றின் கலவையாக யோகா விளங்குகிறது. பிரதமர் மோடியின் மகத்தான முயற்சியால் இந்தியாவின் பெருமை மிகு பாரம்பரிய யோகா 2014 … Read more

21 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் குஜராத்தில் சிவசேனா அமைச்சர் முகாம் – மகாராஷ்டிர அரசுக்கு திடீர் நெருக்கடிக்கு ஏன்?

மும்பை: சிவசேனா கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, 21 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் குஜராத்தில் முகாமிட்டுள்ளதால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிக்கிறார். சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சித் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, சமீபகாலமாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்துவந்தார். கடந்த திங்கட்கிழமை நடந்த … Read more