கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2,426 கன அடி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் இன்று (21ம் தேதி) 2426 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களுரூ பகுதிகளில் பெய்த கனமழையாலும், தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 40.51 அடியாக உள்ளதால், வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. … Read more

அரியலூர் – திருமானூர் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் அதிருப்தி காரணமாக, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சகாதேவன் – வனிதா தம்பதியினர். இவர்களது 17 வயது மகள் அபினா. இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நேற்று பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அபினா 600-க்கு 397 மதிப்பெண் … Read more

'என்னால் நம்ப முடியவில்லை' – பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு

புதுடெல்லி: ‘எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு திரௌபதி முர்மு பெயர் அதிகாரபூர்வ குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் … Read more

தேசிய கல்விக் கொள்கையால் இடைநிற்றல் அதிகரிக்கும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சென்னை: தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில், “தற்போதைய கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கையால் இடைநிற்றல் அதிகரிக்கும்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ஜுனன் இளையராஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. … Read more

சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கல்வி: மதுரை அமைப்பு முயற்சியால் பொதுத்தேர்வில் 39 பேர் தேர்ச்சி

மதுரை: தண்டனைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கல்விச் சேவை அளிக்கும் கூட்டமைப்பு முயற்சியினால் இவ்வாண்டு பொதுத்தேர்வில் 39 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடும்பத் தகராறு போன்ற சில பிரச்சினைகளில் மனைவிகளைக் கொன்றது மற்றும் எதிர்பாராத வகையில் பிற கொலைச் சம்பவங்களில் சிக்கிய சிலர் ஆயுள் தண்டனை கைதிகளாக மத்திய சிறைகளில் உள்ளனர். இவர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உயர் கல்வி வரை படிக்க வைத்து முன்னேற்ற பாதைக்கு அனுப்பும் பணியை மதுரையில் செயல்படும் … Read more

நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால், நெல் கொள்முதல் காலத்தினை அக்டோபர் 1-ம் தேதி துவங்குவதற்கு பதிலாக செப்டம்பர் 1-ம் தேதி முதலே நெல் கொள்முதல் துவங்கிட மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு உத்தரவிடக் கோரி, பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், “சுதந்திர இந்தியாவில் முதல் … Read more

'அடுத்த 60 ஆண்டுகளுக்குள் மண்வளம் முற்றிலும் அழிந்துவிடும்' – 'மண் காப்போம்' விழாவில் ராஜ்நாத் சிங் கருத்து

கோவை: மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உலக நாடுகள் முழுவதும் 30,000 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டர் சைக்கிளில் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை தமிழகம் திருப்பிய சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை 650-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு உலக அளவில் … Read more

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு… யார் இவர்?

புதுடெல்லி: குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு திரௌபதி முர்மு பெயர் அதிகாரபூர்வ குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் … Read more

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு: கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

சென்னை: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் “தனிநாயகம் அடிகள் , பேரறிஞர் அண்ணா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டு கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்டது உலக தமிழ் … Read more

தூய்மைப் பணியாளர்கள் இளைப்பாற வசதிகளை ஏற்படுத்துங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் அமர்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதுமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: “அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தித் துலங்கச் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர். நீங்கள் இதில் … Read more