“யோகா… தனிநபர்களுக்கு மட்டுமின்றி நமது சமூகத்திற்கும் அமைதியை தருகிறது” – பிரதமர் மோடி

மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற 8-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற கண்காட்சியிலும் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: “மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தலங்களின் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோக முறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறியுள்ளது. யோகா இன்று உலகளாவிய ஒத்துழைப்பிற்கான அடிப்படையாக மாறி, மனித குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வின் நம்பிக்கையை வழங்குகிறது. யோகா என்பது இன்று வீடுகளையும் … Read more

“நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீரிழிவு நோய் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ” எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். … Read more

புதுச்சேரி | மின்கம்பி உயிரிழப்புகளை தடுக்கக் கோரி அதிமுகவினரால் மின்துறை தலைமை அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி: மின்கம்பி அறுந்து இருவர் உயிரிழப்பை அடுத்து மின்துறை தலைமை அலுவலகத்தை அதிமுகவினர் இன்று முற்றுகையிட்டனர். மின்கம்பி அறுந்து விழுந்து இருவர் உயிரிழந்ததையடுத்து மின்துறை தலைமை அலுவலகத்தை அதிமுகவினர் இன்று முற்றுகையிட்டனர். புதைவடகேபிள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மின்கம்பிகளின் நிலையை ஆராயவும் அதிகாரிகளுக்கு கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். புதுவை முத்தியால்பேட்டை எம்எஸ்.அக்ரஹாரம் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு நேற்று மாலை மின்சார வயர் அறுந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிலிருந்த 4 … Read more

காங்கோவின் விடுதலை நாயகன்: 61 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட பாட்ரிஸின் பல்

பெல்ஜியத்தால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட காங்கோவின் விடுதலை நாயகன் பாட்ரிஸ் லுமும்பாவின் ‘பல்’ 61 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாட்ரிஸ் லுமும்பா… ஆப்பிரிக்கவின் விடுதலை வரலாற்று நாயகர்களில் மறுக்க முடியாத பெயர். 1925-ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள், பெல்ஜிய காங்கோவின் அனாலுவா என்ற கிராமத்தில் பழங்குடி குடும்பத்திற்கு பிறந்தவர்தான் பாட்ரிஸ் லூமம்பா. பெல்ஜியத்திடம் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக காங்கோ அடிமைப்பட்டு இருந்த காலக்கட்டம் அது. பாட்ரிஸ் தனது இளம் வயதிலேயே … Read more

சர்வதேச யோகா தினம் | ஸ்மார்ட் யோகா மேட்டை அறிமுகம் செய்த யோகிஃபை

புது டெல்லி: சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் ஸ்மார்ட் யோகா மேட்டை (Smart Yoga Mat) அறிமுகம் செய்துள்ளது யோகிஃபை. இதனை பயன்படுத்தும் பயனர்கள் யோகாசனங்களை முறையாக செய்கிறார்களா என்பதை இந்த மேட் சென்சார்கள் மூலம் கண்டறிந்து, அதை சரி செய்ய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிட்னெஸ் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான WELLNESYS-இன் தயாரிப்பு தான் யோகிஃபை (YogiFi). தற்போது யோகிஃபை gen 2 மற்றும் gen 2 புரோ என இரண்டு வெர்ஷன்களில் … Read more

சென்னையில் கனமழை – 5 இடங்களில் தண்ணீர் தேக்கம்; 10 மரங்கள் விழுந்தன

சென்னை: விட்டு விட்டு பெய்யும் கனமழை காரணமாக சென்னையில் 5 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. 10 மரங்கள் விழுந்துள்ளன. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் 2 முதல் 3 மணி நேரம் தொடர் மழை பெய்கிறது. ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்தில் இயல்பாக 56 மி.மீ. மழை பெய்யும். ஆனால், கடந்த 19ம் தேதி மட்டும் ஒரே நாளில் சென்னையில் 82.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. … Read more

கியான்வாபியில் கள ஆய்விற்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல்: வாரணாசியிலிருந்து பரேலிக்கு மாற்றல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாரணாசியின் கியான்வாபி மசூதியில் கள ஆய்விற்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி ரவிகுமார் திவாகருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால், அவர் வாரணாசி சிவில் நீதிமன்றத்திலிருந்து பரேலிக்கு மாற்றல் செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து உபியின் பல்வேறு நீதிமன்றங்களின் 610 நீதிபதிகளுக்கும் மாற்றல் உத்தரவு வெளியாகி உள்ளது. இவர்களில், மாவட்டக் கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிபதிகள் 285, மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் 121 மற்றும் இளநிலை நீதிபதிகள் 213 பேரும் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் … Read more

“அரசியல் காரணங்களுக்காக தற்கொலையைப் போற்றுவோரின் கருத்தை பின் தள்ளுங்கள்” – அண்ணாமலை

சென்னை: “அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளுங்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், “அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளுங்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” … Read more

நாட்டிலேயே முதன்முறை: வாரணாசி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் அறிவிப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாரணாசியின் விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் அறிவிப்புகள் வெளியாகின்றன. பயணிகளுக்காக இதை நாட்டிலேயே முதன்முறையாக அமலாக்கப்பட்டுள்ளது. தெய்வீக நகரமான வாரணாசியின் பாபத்பூரில் இருப்பது லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். இதனுள் சமீப நாட்களாக கோவிட் வைரஸ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியாகத் துவங்கியுள்ளன. தொடர்ந்து சமஸ்கிருத மொழியில் பயணிகளுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளன. இதற்கு முன் அங்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் அறிவிப்புகள் வெளியாகி வந்தன. இது குறித்து வாரணாசி … Read more

“தொடர்ந்து யோகா செய்தால் நாம் மிகப் பெரிய பலத்தை பெற முடியும்” – மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி

கன்னியாகுமரி: “தொடர்ந்து யோகாசனம் செய்வதன் மூலம் நாம் மிகப் பெரிய பலத்தை பெற முடியும்” என்று மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டினைக் கொண்டாடி வருவதால் நாடு முழுவதும் 75 ஐகானிக் இடங்களில் சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன்21) கொண்டாடப்பட்டது. இவற்றில் மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை … Read more