சிக்கலில் மகாராஷ்டிர அரசு; மோதும் பாஜக – சிவசேனா: சட்டப்பேரவையில் எண்ணிக்கை நிலவரம் என்ன?

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் சூரத் நகரில் முகாமிட்டுள்ள நிலையில் ஆளும் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு எந்த அணிக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநில சட்டமேலவைக்கு நேற்று நடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் சிவசேனா எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் எம்எல்சி தேர்தலில் கட்சி மாறி … Read more

“ஒற்றைத் தலைமைக்கு இபிஎஸ் வருவதை தடுப்பதுதான் ஓபிஎஸ் நோக்கம்” – ஜெயக்குமார்

சென்னை: “தமிழகம் முழுவதும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற எழுச்சி உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஒற்றைத் தலைமைக்கு வரவேண்டும் என்ற எழுச்சி உள்ளது. இந்தச் சூழ்நிலையில், இதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றங்களுக்கு செல்வதும், கடிதம் எழுதுவதும், இதை எந்தவொரு அதிமுக தொண்டனும், நிச்சயமாக ஏற்கமாட்டான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பொதுக்குழு … Read more

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிப்பு

புது டெல்லி: எதிர்வரும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. “எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை போட்டியிட செய்து மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு சேதம் செய்வதை தடுக்க முடிவு செய்துள்ளோம். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் யஷ்வந்த் சின்காவை பொது வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். அனைத்து அரசியல் கட்சிகளும் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிக்க வேண்டும்” … Read more

“மூன்று நாட்களில் 21 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்” – புதுச்சேரி எம்.பி. தொகுதி பாஜக பொறுப்பாளர் எல்.முருகன்

புதுச்சேரி: “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை தொடங்குகிறோம்” என்று புதுச்சேரி எம்.பி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். புதுச்சேரி உட்பட 144 எம்.பி தொகுதிகளில் தேர்தல் பணிகளை பாஜக தொடங்குகிறது. இவை அனைத்தும் தென்னிந்தியாவில் உள்ளன. புதுவையில் நடந்த யோகா விழாவில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”நாடாளுமன்றத் … Read more

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆவணங்களை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி … Read more

'i1' என்ற ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ள நாய்ஸ் நிறுவனம் | விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: ‘i1’ என்ற ஸ்மார்ட் கண் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது நாய்ஸ் நிறுவனம். இந்த கண்ணாடியின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்பட்களை வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் Wearable டிவைஸ்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் நாய்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், முதன்முறையாக ‘i1’ என்ற ஸ்மார்ட் கண் கண்ணாடியை தற்போது அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் இப்போது தான் … Read more

இன்று உலக யோகா தினம்: ராமேசுவரத்தில் பிரபலமாகி வரும் ‘கடல்’ யோகா

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கடலில் சறுக்குப் பலகையில் அமர்ந்து செய்யும் யோகா பிரபலமாகி வருகிறது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் அறிவித்தது. அதன் பின் 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ராமேசுவரம் தீவில் உள்ள மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி, பாம்பன் கால்வாய் ஆகிய பகுதிகள் நீச்சல், துடுப்புப் படகு, பெடல் படகு, அலைச் சறுக்கு உள்ளிட்ட … Read more

அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து முழு அடைப்பு – நாடு முழுவதும் 500 ரயில் சேவை பாதிப்பு

புதுடெல்லி: அக்னி பாதைத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற முழு அடைப்பின்போது நாடு முழுவதும் 500 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ராணுவத்தில் அக்னி பாதை திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிஹார் மாநிலத்தில் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா?

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மூன்று தலைவர்கள் மறுத்துள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் … Read more