சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை: மக்கள் இயல்பு வாழ்கை பாதிப்பு

தென் பகுதி சீனாவில் 60 ஆண்டுகள் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக தென் பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சீனாவில் தென் பகுதியில் பெய்த கனமழை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையில் 7 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கவுண்டான் மாகாணத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு, கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக சாலைகள், ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 1,77,660 பேர் வேறு இடங்களுக்கும் … Read more

விரைவுப் பேருந்துகளில் எம்எல்ஏ-க்களுக்கு பிரத்யேக படுக்கை ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்காக ஓரிரு இருக்கைகள் ஒதுக்கப்படும். அவர்கள் வராதபட்சத்தில் அந்த இருக்கைகள் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கப்படும். இந்நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பிரத்யேக படுக்கை ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், அனைத்து கிளை மேலாளர்கள், கோயம்பேடு பேருந்து நிலைய துணை மேலாளர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், அனைத்து பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு … Read more

மத்திய அரசின் அக்னிபாதை விவகாரத்தில் முதல்வர் நிதிஷ்குமார் மவுனத்தால் பாஜக அதிருப்தி

புதுடெல்லி: மத்திய அசின் அக்னிபாதை திட்டம் மூலம் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு நாட்டின் பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில், மிக அதிகமான எதிர்ப்பு பிஹாரில் நிலவுகிறது. போராட்டத்தினால், ரயில் உள்ளிட்ட மத்திய அரசின் பல கோடி சொத்துக்கள் சேத மடைந்துள்ளன. பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவளிக்கும் பாஜகவின் ஆறுக்கும் மேற்பட்ட அலுவலகங்களும், அக்கட்சியின் துணை முதல்வர் குடியிருப்பும் சூறையாடப்பட்டுள்ளன. பாஜக வின் பல்வேறு தொகுதி எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் போராட்டக் காரர்களால் … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் தண்ணீர் இருப்பு 23.48 அடியாக உள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான … Read more

மகாராஷ்டிர அரசுக்கு ஆபத்து?- சிவசேனா அமைச்சர், 13 எம்எல்ஏக்கள் குஜராத்தில் முகாம் 

மும்பை: மகாராஷ்டிராவில் எம்எல்சி தேர்தலில் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்த சிவசேனா அமைச்சர் மற்றும் 13 எம்எல்ஏக்கள் சூரத் நகருக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மகாராஷ்டிர சட்டசபையில் மொத்தம் உள்ள 288 எம்எல்ஏக்களில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களும், சிவசேனா 55 பேரும், தேசியவாத காங்கிரஸுக்கு 51 எம்எல்ஏகள் ஆதரவும், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்எல்ஏக்களும் … Read more

ஈரோடு அரசு மருத்துவர்கள் இருவர் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாமக்கல்: ஈரோடு அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது பணியில்லாத மருத்துவர் மற்றும் மகனை மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதித்த மருத்துவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதைமலைக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | 'என்னைவிட சிறப்பானவர்கள் இருப்பார்கள்' – மறுப்புக்கு கோபாலகிருஷ்ண காந்தி விளக்கம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவதையொட்டி ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜக கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த 15-ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தின. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் … Read more

'குழந்தைகளுக்கு தோல்வியை பழக்கப்படுத்த வேண்டும்' – விழுப்புரம் மனநல மருத்துவர் 

விழுப்புரம்: குழந்தைகள் கேட்டவுடன் பெற்றோர்கள் எதையும் உடனடியாக வாங்கிக் கொடுக்கக்கூடாது, ஒருமுறைக்கு பலமுறை கேட்ட பின்பு வாங்கிக் கொடுக்க வேண்டும், அப்படி வாங்கிக்கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட நேர்ந்தது என்பதை சொல்லித் தர வேண்டும் அப்போது தான் தோல்வி பழகும் என்று மனநல மருத்துவர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பின் 2 மாணவிகள், 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 5 மாணவ, … Read more

காஷ்மீரில் 3 என்கவுன்ட்டரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரின் குப்வார மாவட்டம், சண்டிகாம் லோலாப் பகுதியில் உள்ள காட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, கைது செய்யப்பட்ட சவுகத் அகமது ஷேக் என்ற தீவிரவாதி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் ராணுவ வீரர்களும் குப்வாரா மாவட்ட போலீஸாரும் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் தீவிர வாதிகளை தேடும் பணியில் ஈடு பட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் … Read more

ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்ற இபிஎஸ் திட்டமா? – பொதுக்குழு கூட்டம் நடக்குமா என தொண்டர்கள் சந்தேகம்

சென்னை: சட்டம் – ஒழுங்கு பிரச்சினை உருவாகியுள்ளதால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்குமாறு இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளதால், பொதுக்குழு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில், திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தி,அதில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தைநிறைவேற்ற பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்ததில் இருந்து கடந்த ஒரு வாரமாகவே அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. தொடர்ந்து, நேற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான துணை ஒருங்கிணைப்பாளர் … Read more