கேரள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு – மத்திய அமைச்சர் சந்தேகம்

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அமைச்சர் முரளிதரன் கூறியதாவது: கேரளாவில் கடந்த ஆண்டு நடந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கவலையும் சந்தேகமும் எழுந்துள்ளது. முதல்வரின் கீழ் செயல்படும் பொது நிர்வாகத் துறையின் செயல்பாடுகளும் ஐக்கிய அரபு அமீரக ஊழியர்களுடனான அவரின் தொடர்புகளும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள … Read more

தனி நபராக 1001 வகை யோகாசனங்கள் மூலம் உலக சாதனை புரிந்த உடுமலை யோகா ஆசிரியர்

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை முக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வி.குணசேகரன் (48). யோகா ஆசிரியர். இவரது மனைவிசத்தியபாமா, மகள் அக்னி மரகதவர்ஷினி. குணசேகரன் யோகாசனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 1001 வகையான ஆசனங்களை பானை, நாற்காலி, ஏணி, மேஜை உள்ளிட்ட பல வகையான பொருள்களை பயன்படுத்தி செய்து, உலக சாதனை செய்துள்ளார். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் குள்ளமானவராக நடித்ததுபோல, குணசேகரனும் 2018-ல் கால்களை கட்டிக்கொண்டு 40 நிமிடங்களில் 3,320 காலடி நடைபயிற்சி செய்தது உலக … Read more

அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும்: ராணுவ துணைத் தளபதி

அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் என்று ராணுவ துணைத் தளபதி பி.எஸ்.ராஜூ தெரிவித்துள்ளார். ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் ‘அக்னி பாதை’ திட்டம், கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதிய திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அக்னி பாதை திட்டத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. இந்நிலையில் புதிய திட்டம் குறித்து … Read more

தமிழக பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது – பிளஸ் 2-வில் 93.7%, பத்தாம் வகுப்பில் 90% தேர்ச்சி

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் பேரும், பிளஸ் 2-வில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை பிளஸ் 2-வில் பெரம்பலூர் மாவட்டமும், பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரி மாவட்டமும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். கரோனா வைரஸ் தொற்று பரவலால் கடந்த 2020-ம் … Read more

எதிர்காலத்தை கட்டியெழுப்ப அக்னிபாதை உதவும் – பெங்களூருவில் ரூ.27,000 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி கருத்து

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று பெங்களூரு வந்தார். அங்கு யஷ்வந்த்பூர் ரயில் நிலையம், பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான ரூ.27,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் தவிர பெங்களூருவில் மூளை ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்தார். பின்னர் கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், 7 ரயில்வே திட்டங்கள், அண்மையில் திறக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம் தொடர்பான … Read more

மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் – கல்லூரி மாணவிகளின் விவரம் சேகரிக்க உத்தரவு

சென்னை: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகளின் விவரங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஜூலை 15-ம் தேதி அமல் இந்த திட்டம் ஜூலை 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக … Read more

செகந்திராபாத் ரயில் எரிப்பு வழக்கில் 52 இளைஞர்கள் கைது – சிறைச்சாலை முன் பெற்றோர் கண்ணீர்

ஹைதராபாத்: செகந்திராபாத் ரயில் எரிப்பு வழக்கில் இதுவரை 52 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காண 500-க்கும் மேற்பட்டோர் நேற்று சிறைச்சாலை முன் குவிந்தனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஸ்ட்கோஸ்ட் ரயிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். மேலும், செகந்திராபாத் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் உள்ள கடைகள், பார்சல் சர்வீஸ், ஓட்டல்கள் போன்றவற்றை அவர்கள் உடைத்து நொறுக்கினர். இதனால் தென்மத்திய ரயில்வே துறைக்கு ரூ. … Read more

தென் மாவட்டங்களில் உள்ள நவக்கிரக தலங்களை மேம்படுத்த நடவடிக்கை – அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தென்மாவட்ட நவக்கிரகத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரசித்தி பெற்ற நவக்கிரக கோயில்கள், நவகயிலாய கோயில்கள், பஞ்ச சபை, அட்டவீரட்டானத் தலங்கள் ஆகிய கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உட்பட பாண்டிய நாட்டு நவக்கிரக கோயில்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. … Read more

கோவை, சேலம், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், சேலம், கோவை, வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 21-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், … Read more

கரோனா அதிகரிப்பதால் மக்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் முதல் 2 தவணைகள், பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் விரைவாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தொற்று அச்சுறுத்தலாக உள்ளது. தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி தொற்று எண்ணிக்கை 692. இதில், சென்னையில் மட்டும் 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலை தடுக்க தமிழக அரசும், … Read more