ஒற்றைத் தலைமை: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக புதுவை கிழக்கு மாநில அதிமுக தீர்மானம்

புதுச்சேரி: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இக்கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட செயலரும் பங்கேற்றார். முத்தியால்பேட்டை அதிமுகவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. புதுவை கிழக்கு மாநில அதிமுக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர கழகம் மற்றும் தொகுதி கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று உப்பளம் தலைமை கழகத்தில் நடந்தது. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். காரைக்கால் மாவட்ட செயலாளர் … Read more

அக்னி பாதை | ஜூலை முதல் விண்ணப்பிக்கலாம் – கல்வித் தகுதி, வழிமுறைகளை வெளியிட்டது ராணுவம்

புதுடெல்லி: ‘அக்னி பாதை’ திட்டத்தில் சேர அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் ‘அக்னி பாதை’ திட்டம், கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதிய திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அக்னி பாதை திட்டத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: அக்னி பாதை திட்டத்தில் … Read more

'முதல்வர் சந்திப்பை அரசியல் ஆக்குவது எந்தவகையில் நியாயம்?' – ரவீந்திரநாத் எம்.பி

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பது குறித்த கேள்விகள் எழுந்தன. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை தினமும் ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர். ஓபிஎஸ்சை நேற்று சந்தித்த ஆவின் வைத்தியநாதன் செய்தியாளர்களை சந்திக்கையில், “சசிகலா தலைமையில் பயணிக்க ஓபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளார். எடப்பாடிக்கு சசிகலா தலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று ஓபிஎஸ் கூறினார். தேவைப்பட்டால் சசிகலாவை ஓபிஎஸ் சந்திப்பார்” என்று தெரிவித்தார். அதேநேரம் இரவு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் மகனும் … Read more

டெல்டாவில் 8 மணல் குவாரிகளுக்கு அனுமதி: திமுக அரசு மீது அண்ணாமலை தாக்கு

சென்னை: டெல்டாவில் புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள 8 மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். டெல்டா பகுதிகளில் புதிதாக 8 மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் “காவிரி டெல்டா பகுதியில் 8 புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது திமுக அரசு. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலேயே இந்த நிலைமை. இப்படி இயற்கை வளங்களை சூறையாடுவது தான் … Read more

புதுச்சேரி 10, +2 முடிவுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி: அமைச்சர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 10, 12 தேர்வு முடிவுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. தொற்று பரவல் குறைந்ததையடுத்து 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. இதையடுத்து, கடந்த மே 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு முடிவு இன்று காலை … Read more

காரைக்கால் மாவட்டத்துக்கு நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்படுவது எப்போது?

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தின் முந்தைய ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 2 மாதங்களை நெருங்கும் நிலையில் இன்னும் புதிதாக நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்படாமல் இருப்பது காரைக்கால் மாவட்ட மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 2 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. 4 பிராந்தியங்களில் புதுச்சேரிக்கு அடுத்தபடியாக பெரிய பிராந்தியமாகவும், முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகவும் காரைக்கால் உள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த அர்ஜூன் சர்மா அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பணியிடமாற்றம் … Read more

அக்னி பாதை திட்டம்; ராகுல் காந்தி மீதான விசாரணைக்கு எதிர்ப்பு – ஜனாதிபதியிடம் முறையிட்ட காங்கிரஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். சந்திப்பில், அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரிய போராட்டத்தின் போது, ​​கட்சி எம்.பி.க்களை போலீஸார் மோசமாக நடத்தப்பட்ட விவகாரம், ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணை செய்கின்ற விவகாரம் போன்றது குறித்து பேசினர். காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் … Read more

கோவை: காவல் நிலையத்திலிருந்து இளைஞர் தப்பியோட்டம் – பிடிக்க முயன்றபோது காவலருக்கு காயம்

கோவை: கோவையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவரை பிடிக்க முயன்ற போது காவலருக்கு காயம் ஏற்பட்டது. கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா(22). இவர், சில தினங்களுக்கு முன்னர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஜீவா தனது சகோதரருடன் சேர்ந்து சுரேஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சுரேஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் … Read more

"அக்னி பாதைக்கு எதிராக விவரம் தெரியாதவர்களே போராடுகிறார்கள்" – மன்னார்குடி ஜீயர்

சேலம்: மத்திய அரசின் அக்னி பாதை திட்டம் குறித்து விவரம் தெரியாதவர்களே அதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ராணுவ அதிகாரிகளோ, முன்னாள் ராணுவ வீரர்களோ இதுவரை அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான கருத்துகளை சொல்லவில்லை என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார். சேலம், சின்னகடை வீதியில் உள்ள வேணுகோபாலசாமி கோயிலுக்கு வருகை புரிந்த மன்னார்குடி செண்டலங்கார சென்பக மன்னார் ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசின் அக்னி பாதை திட்டம் குறித்த விவரம் … Read more

'அரசோ, தனியாரோ இரண்டுமே நாட்டின் சொத்துக்கள்; அனைவருக்கும் சமமான பங்களிப்பு அளிக்க வேண்டும்' – பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: “அரசோ அல்லது தனியாரோ இரண்டுமே நாட்டின் சொத்துக்கள், எனவே அனைவருக்கும் சமமான பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று தான் நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி திங்கள்கிழமை பெங்களூருவில் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்முனை ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பக்ஷி பார்த்தசாரதி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி மூளை ஆராய்ச்சி மையத்தையும் … Read more