மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி மனுத் தாக்கல்

பாட்னா: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவந்த மகள் மிசா பாரதியுடன், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் உடன்வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவரும் அவரைப் பார்க்க தொண்டர்கள் கூட்டம் கூடியது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் லாலு மகள் மிசா பாரதி மற்றும் முன்னாள் எம்எல்ஏ பயஸ் அகமது, மறைந்த முன்னாள் எம்.பி மொகத் சகாபுதினின் மனைவி ஹினா சகாப் ஆகியோர் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். … Read more

“சமூக நீதிப் பாதையில் தொடர்ந்து பாடுபடுவீர்!” – பாமக தலைவர் அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள @draramadoss அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்! — M.K.Stalin … Read more

உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – மருமகள் மீது போலீஸார் வழக்கு பதிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இவர் 2004-05-ம் ஆண்டில் என்.டி. திவாரி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ஹால்தானி பகுதியில் மகன் அஜய் பகுகுணா, மருமகள், பேத்தியுடன் வசித்தார். கடந்த வாரம் பேத்தியை மானபங்கம் செய்ய முயன்றதாக இவரது மருமகள் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை போலீஸாருக்கு போன் செய்து விட்டு மாடியிலுள்ள … Read more

“கருணாநிதி சிலையைப் பார்த்தவுடன் நெஞ்சம் உருகிவிட்டது” – துரைமுருகன்

சென்னை: “கருணாநிதியின் சிலையைப் பார்த்த உடன் நெஞ்சம் உருகிவிட்டது” என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். சென்னை – ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கலைவாணர் … Read more

கரோனா காலம்: 40% வடகிழக்கு மாநில மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் வசதி இல்லை – NAS தகவல்

புதுடெல்லி: கரோனா பொது முடக்க காலத்தில், வடகிழக்கு மாகாணங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் இல்லாமல் இருந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன் கிழமை நேஷனல் அச்சீவ்மெண்ட் சர்வே 2021 (National Achievement Survey) அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையின் படி, வடகிழக்கு மாகாணங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கரோனா பொது முடக்க காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் … Read more

”பிற மொழிகளை மக்களிடம் திணிக்கக் கூடாது” – கருணாநிதி சிலையை திறந்து வைத்த வெங்கய்ய நாயுடு பேச்சு

சென்னை: “இந்தியாவில் ஆற்றல் வாய்ந்தவர்களில் முதன்மையானவர் கருணாநிதி” என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார். சென்னை – ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார். … Read more

பலாப்பழத்தில் இட்லி முதல் பன் வரை: மங்களூருவில் களைக்கட்டிய பலாப்பழ மேளா!

மங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இரண்டு நாள் “பலாப்பழ மேளா” இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹிரியட்கா நகரில் இருக்கும் வீரபத்ர சாமி கோயில் வளாகத்தில் இந்த மேளா நடைபெறுகிறது. இதில், பலாபழத்தின் ரகங்கள், பழத்தைக் கொண்டு தாயரிக்கப்படும் உப பொருள்கள், பலா மரக்கன்றுகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல பலாப்பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் அங்கேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் விவசாயிகள் … Read more

“இந்தி திணிப்பை எதிர்ப்போம்” – வெங்கய்ய நாயுடு திறந்து வைத்த கருணாநிதி சிலையில் 5 வாசகங்கள்

சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து கருணாநிதி சிலையின் கீழே “இந்தி திணிப்பை எதிர்ப்போம்” என்பன உள்ளிட்ட 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சென்னை – ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை குடியரசு துணைத் … Read more

அதானியின் அடுத்த பயணம்: விவசாய ட்ரோன் தயாரிப்பில் புதிய ஒப்பந்தம்

பெங்களூரு: விவசாய ட்ரோன்கள் தயாரிப்பில் பெரும் சாதனை படைத்து வரும் பெங்களூரைச் சேர்ந்த ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. உலக அளவில் ட்ரோன்கள் என்பது முதல்கட்டமாக ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு பல்வேறு துறைகளிலும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ட்ரோன்கள் மூலம் நிலம், சொத்து அளவீடு செய்யப்படுகிறது. மருந்துகள் விநியோகம் செய்யப்படுகிறது. கரோனா தடுப்பூசிகள் தொலைதூர பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை … Read more

சென்னையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார். திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். 60 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் … Read more