பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு: சிறப்பு பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு பொதுக் குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான தீர்மானத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 01.01.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே.மணி கடந்த 25 ஆண்டுகளாக … Read more

‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் 27 கோடிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்கள் பதிவு – உச்ச நீதின்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கரோனா தொற்று நீடிக்கும் வரை புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன், நல உதவிகளை அளிக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, ‘‘மாநில அரசுகள் அளிக்கும் தகவல் அடிப்படையில், தேசிய தகவல் மையத்துடன் ஆலோசித்து உருவாக்கப்பட்ட … Read more

அவருக்கு 76 வயது… எனக்கு 19… – இத்தாலியில் கவனம் ஈர்த்த காதல் இணை!

ரோம்: இத்தாலியில் 18 வயது இளைஞர் ஒருவர், 76வயதான பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்தவர் 19 வயதான கியூசெப் டி’அன்னா. இவரை டிக் டாக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கிறார்கள். இவர் கடந்த மே 24-ஆம் தேதி தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், அன்னா தனது 76 வயதான காதலியை அறிமுகப்படுத்தி இருந்தார். மேலும், தாங்கள் இருவரும் நிச்சயம் செய்து கொண்டதாகவும் அவர் … Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் ஜூன் 13-ல் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஜூன் 13-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ம் தேதியும், 12-ம் வகுப்பிற்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்பிற்கு ஜூன் 27-ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று சில நாட்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும் மாணவர்கள், இணையம் வாயிலாக அடுத்த ஆண்டு பள்ளி … Read more

முறைகேடாக விசா பெற்றுத்தந்த வழக்கு: சிபிஐ முன்பு 2-வது நாளாக ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்

புதுடெல்லி: முறைகேடாக விசா பெற்றுத் தந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் நேற்று 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் 2011-ல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா பெற்றுத் தந்தார் என்றும் இதற்காக கார்த்தி ரூ.50 லட்சம் லஞ்சமாகப் பெற்றார் என்றும் சிபிஐ வழக்குபதிவு செய்தது. இதற்கிடையில், நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்றிருந்த கார்த்தி, நாடு … Read more

குன்னூர் பழக்காட்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்த கழுகு, கரடி வடிவமைப்புகள்

குன்னூர்: குன்னூரில் 62-வது பழக்காட்சி இன்று (மே 28) தொடங்கியது. ஓரு மெட்ரிக் டன் கருப்பு மற்றும் பச்சை திராட்சை பழங்களால் வடிவமைக்கப்பட்ட கழுகு மற்றும் கரடி வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்காட்சி இன்று தொடங்கியது. இதில் ஒரு மெட்ரிக் டன் எடையிலான பச்சை மற்றும் கருப்பு திராட்சை பழங்களைக் கொண்டு 9 அடி உயரம் மற்றும் 12 அடி நீளத்தில் கழுகு மற்றும் … Read more

சார் தாம் பாத யாத்திரையில் இதுவரை 74 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் புனித யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் உள்ள 4 புனித தலங்களில் யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகியவை உத்தரகாசி மாவட்டத்திலும், கேதார்நாத் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும், பத்ரிநாத் சமோலி மாவட்டத்திலும் உள்ளன. இந்த யாத்திரை தொடங்கியதில் இருந்து 3.35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத்துக்கும், 3.15 லட்சம் பக்தர்கள் பத்ரிநாத்துக்கும், 1.49 லட்சம் பக்தர்கள் யமுனோத்ரிக்கும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கங்கோத்ரிக்கும் கடந்த புதன்கிழமை வரை சென்றுள்ளனர். கடந்த … Read more

மாநிலம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: “தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை மாநிலம் முழுவதும் நடத்தப்படும்” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று, தந்தை பெரியாரிடம் கற்றுத் தெளிந்த லட்சியப் பிடிப்பின் அடிப்படையில், தன்னைத் தமிழ் உலகிற்குப் பிரகடனப்படுத்திக் கொண்ட கொள்கைச் சிகரமாம் “தமிழினத் தலைவர்” கலைஞரின் 99-ஆவது பிறந்தநாளினையொட்டி, … Read more

யாசின் மாலிக் வழக்கு: இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: தீவிரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம் என யாசின் மாலிக் வழக்கில் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஓஐசி எனப்படும் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை வழங்கியதை விமர்சித்திருந்தது. இது குறித்து வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் அந்தக் கூட்டமைப்பு தீவிரவாத நிதியை ஆதரிப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. தீவிரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையையே இந்த … Read more

சென்னையில் இன்று சிறப்பு பொதுக்குழு: பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணி

சென்னை: சென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி அறிவிக்கப்படுகிறார். பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம், சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் இன்று(மே 28) காலை 11 மணி அளவில் நடக்கிறது. பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உட்பட தமிழகம், … Read more