குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மோடி சந்தித்துப் பேசினார். 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்தியில், குடியரசுத் தலைவரை பிரதமர் சந்தித்துப் பேசியதாக தெரிவித்துள்ளது. இது வழக்கமான சந்திப்புதான் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பின்போது இருவரும் … Read more

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு | அரசுப் பள்ளிகளில் 89.06% தேர்ச்சி: 246 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

சென்னை: 12 ஆம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 246 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு பெற்றள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர், இதில் மாணவியர் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655. தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து … Read more

இளைஞர்களை அக்னிபாதையில் நடக்க வைக்கிறார்; வேலை குறித்து தவறான நம்பிக்கை தருகிறார் பிரதமர் மோடி – ராகுல் தாக்கு

புதுடெல்லி: ‘‘வேலை குறித்து தவறான நம்பிக்கையை தொடர்ந்து அளித்து, நாட்டின் இளைஞர்களை வேலைவாய்ப்பின்மை என்ற அக்னிபாதையில் நடக்க வைக்கிறார் பிரதமர் மோடி’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஓய்வூதிய செலவுகளை குறைப்பதற்காக, ராணுவத்தில் 4 ஆண்டுகள் சேவை ஆற்றும் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திட்டத்தை வாபஸ் பெறக்கோரி அவர்கள் கடந்த 4 நாட்களாக … Read more

மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் ஜூன் 22-ல் ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக மாநிலம் அணை கட்டத் திட்டமிட்டிருப்பதைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வரும் 22-ம் தேதி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றுவிவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பெ.சண்முகம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் (பாலன் இல்லம்) என்.பெரியசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் வி.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: … Read more

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் தோட்ட பணியாள‌ர் வீட்டில் சோதனை: கோடிக்கணக்கில் ரொக்கம், தங்கம் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடக மாநில ஊழல் தடுப்புத்துறை போலீஸார், 21 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 80 இடங்களில் சோதனை நடத்தினர். பெங்களூரு வடக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஜனார்த்தனம், துணைத் தேர்தல் ஆணையர் சித்தப்பா, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் தோட்ட பணியாளராக பணியாற்றும் சிவலிங்கையா மற்றும் நீர்ப்பாசனத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றில் பணியாற்றும் பொறியாளர் உட்பட 21 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத … Read more

அதிமுக இரண்டாக உடைய பாஜகதான் காரணம்: காங். மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியின் 51-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதில்,தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கேக் வெட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: பாஜக மக்களைத் துன்புறுத்திவருகிறது. அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென மோடியும், அமித்ஷாவும் கனவு கண்டுவருகின்றனர். ஒருவேளை அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய துணைக் கண்டமே இல்லாமல் போய்விடும். எனவே,ஜனநாயகத்தையும் மக்களையும் காப்பாற்ற நாம் களம் இறங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி, … Read more

’அக்னிபாதை வீரர்களுக்கு பாஜக அலுவலக பாதுகாப்புப் பணியில் முன்னுரிமை’ – கட்சிப் பிரமுகரின் பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தில் சேவையாற்றி வெளியேறும் அக்னிவீரர்களுக்கு பாஜக அலுவலக பாதுகாப்புப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தேசியச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா தெரிவித்துள்ளது சர்ச்சையாகி இருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கைலாஷ் விஜயவார்கியா, “ஒரு அக்னிவீரர் 4 ஆண்டுகள் சேவையை முடித்து தனது 25 வது வயதில் வெளியே வரும்போது அவர் கையில் ரூ.11 லட்சம் இருக்கும். அவரை அக்னிவீரர் என்று அனைவரும் கொண்டாடுவர். பாஜக … Read more

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகம்

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல்மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும்வேகமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஜனவரிமுதல் மே மாதம் வரையிலான5 மாதங்களில் 10,172 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா (1,714 பேர்), ராஜஸ்தான் (824 பேர்), ஆந்திரா (810 பேர்), மகாராஷ்டிரா (786 பேர்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக மத்திய சுகாதாரத் … Read more

ஒடிசாவின் தேசிய வனப்பகுதியில் குழந்தைகளுக்கான படகு நூலகம்

கேந்திரபாரா: ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் பிதர்கனிகா தேசிய வனப் பகுதி உள்ளது. இங்குள்ள மாங்குரோவ் காடுகள், ராம்சார் ஈரநிலப் பகுதியாக கடந்த 2002-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இங்குள்ள நீர்நிலைகளில் அழியும் நிலையில் உள்ள உவர்நீர் முதலைகள் அதிகளவில் உள்ளன. இந்த மாங்குரோவ் காடுகளையும், இங்குள்ள வனவிலங்குகளையும் பாதுகாக்க வனத்துறை சார்பில் படகு ஒன்று பயன்படுத் தப்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற நிலையில் இருந்த அந்தப் படகை, நிலையான நூலகமாக மாற்ற பிதர்கனிகா வனத்துறை அதிகாரி ஜே.டி.பாடி என்பவர் … Read more

பொறியியல் கலந்தாய்வு: ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில், பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் இன்று (ஜூன் 20) காலை தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூலை 19ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ஜூலை 22ல் ரேண்டம் எண் வெளியிடப்படும். ஆகஸ்ட் 8ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14 வரை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும். இன்று … Read more