தமிழகத்தின் புதுமைப் பெண்களை அடையாளம் காட்டுகிறது தனிஷ்க் – ‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து முன்னெடுப்பு

சென்னை: பாரதியின் ‘புதுமைப் பெண்’ எனும் தத்துவத்தில் உத்வேகம் பெற்ற பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து தமிழ் கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் புதுமைப் பெண்களைக் கொண்டாட விரும்பி, இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. ‘புதுமைப் பெண்’ தமிழ்க் கலாச்சாரத்தின் பாதுகாவலராகவும், புதுமையின் முன்னோடியாகவும் இருப்பதோடு, தங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். ‘புதுமைப் பெண் யார்’ என்பது குறித்து சில பிரபலங்களிடம் கேட்டோம். … Read more

'அதிகாரத்தை தக்கவைக்க ஒரு குடும்பம் படாத பாடுபடுகிறது' – ஹைதராபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விமர்சனம்

ஹைதராபாத்: குடும்ப வாரிசு அரசியல் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் ஒரு மணியளவில் ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பேகம்பேட்டில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் … Read more

குழந்தைகளுக்கு பிரதமர் நன்றி

சென்னைக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் இருந்து நேருவிளையாட்டு அரங்கத்துக்கு பிரதமர் மோடி சாலை வழியாக காரில் சென்றார். சாலையோரங்களில் திரண்டிருந்த பாஜகவினர் கைகளையும், கொடிகளையும் அசைத்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் சென்ற சாலைகளில் வாழை மரங்கள், பாஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மேளதாளங்கள் முழுங்க பொய்கால் குதிரையாட்டம், கதகளி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பிரதமரின் கார் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் … Read more

3வது ஆண்டாக கல்வி தரத்திலும், வசதியிலும் சாதனை படைத்த சூரத் அரசு பள்ளி – குழந்தைகளை சேர்க்க பெற்றோர் தவம்

சூரத்: கல்வியின் தரத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளைவிட சிறந்து விளங்குவதால், தொடர்ந்து 3-வது ஆண்டாக, அங்கு மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுகிறது. பொதுவாக அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்குவது வழக்கம். ஆனால், அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த குஜராத் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சூரத் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் கல்வியின் தரத்தையும், … Read more

மத்திய அரசின் நிதி பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை முழு விவரம்

சென்னை: கூட்டுறவு கூட்டாட்சி என்ற உணர்வுடன் அதிக திட்டங்களை தருவதுடன் தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும் என சென்னையில் நடந்த விழாவில் பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கோரிக்கை விடுத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த பிரம்மாண்ட விழாவில் மத்திய, மாநில அரசு துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: … Read more

கர்நாடக காங். தலைவர் சிவகுமார் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு: கடந்த 2018ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.10 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம், ஏராளமான சொத்துக்களின் ஆவணங்கள், கணக்கில் வராத தங்க வைர நகைகளை கைப்பற்றினர். இதுகுறித்து விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் டி.கே.சிவகுமார் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் … Read more

ஹஜ் பயணம் திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை: நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள 1,500 பேருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட யாத்ரீகர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை சூளையில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, ‘‘நடப்பாண்டில் தமிழகத்திலிருந்து … Read more

காஷ்மீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார், நிலைதடுமாறி அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்டு … Read more

சென்னையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – தமிழ் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக உறுதி

சென்னை: சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். தமிழ் மொழி, கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் நெடுஞ்சாலை, ரயில்வே துறையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் … Read more

கரூர் கோயில் விழா: அனுமதி மறுப்பால் தடுப்பைத் தாண்டிச் சென்ற ஜோதிமணி எம்.பி

கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் அமராவதி ஆற்றுப் பகுதியில் கம்பம் ஆற்றில் விடும் இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பேரிகார்டில் ஏறி குதித்து எம்.பி. ஜோதிமணி நுழைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரின் பிரசித்திப்பெற்ற விழாவான கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, எஸ்.பி. ப.சுந்தரவடிவேல், கரூர் மேயர் கவிதா, துணைமேயர் ப.சரவணன், கோட்டத்தலைவர் … Read more