சமரசத்தை ஏற்காத ஓபிஎஸ் | ஒற்றைத் தலைமையை விடாத இபிஎஸ்; 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்குமா?
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டுவர வேண்டும் என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். அதேநேரத்தில் மூத்த தலைவர்களின் சமரசத்தை ஏற்க ஓ,பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார். இந்நிலையில், திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் 6-வதுநாளாக நேற்றும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். கட்சியின் மூத்த தலைவர்களான தம்பிதுரை, கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜூ … Read more