சென்னையில் மோடி: காரின் கதவை திறந்து கையசைத்து பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர்

சென்னை: பிரதமர் மோடி ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கம் வந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது காரின் கதவைத் திறந்து கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், உயர் கல்வித் … Read more

ராஜஸ்தான்: மனைவியால் தாக்கப்பட்ட பள்ளி முதல்வர் – வைரல் வீடியோவும் பாதுகாப்பு உத்தரவும்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பள்ளி முதல்வர் ஒருவர் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக புகார் அளித்துள்ளார். அதற்கான ஆதாரத்தை அவர் சமர்ப்பித்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நபர் ஒருவர், பெண் ஒருவரால் கடுமையாக தாக்கப்படும் காட்சி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், அந்த வீடியோவில் இருப்பவர் அஜித் யாதவ என்பதும், அவருடைய மனைவியால் அவர் பேட், வீட்டு உபயோகப் பொருட்களால் தாக்கப்பட்டிருப்பதும் … Read more

மின்துறை தனியார்மயம் | “ஆய்வுக்குப் பின் நடவடிக்கை” – புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: “மத்திய அரசு கூடுதல் நிதி தரும், பிரதமரைச் சந்திக்க விரைவில் டெல்லி செல்வேன். மின்துறை தனியார்மய விவகாரத்தில் மக்களுக்கு நல்லதையே அரசு செய்யும்” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மத்திய அரசு கூடுதல் நிதி தரும் என்ற நம்பிக்கையுள்ளது. பட்ஜெட் தாக்கலாகும்போது … Read more

சலில் பரேக்கிற்கு ரூ.71 கோடி சம்பளம்: ஆண்டுக்கு 43% உயர்வு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்போசிஸ்

பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக் ஆண்டு சம்பளம் ரூ.49.7 கோடியில் இருந்து 43 சதவீதம் அதிகரித்து ரூ.71 கோடியாக உயர்ந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது. காலச் சக்கரம் எப்போதும் ஒரு தரப்புக்கு சாதகமாக சுழலாது என்பதைப் போல கடந்த … Read more

அறிமுகமானது மோட்டோ E32s ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள்

மோட்டோ E32s ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E சீரிஸ் வரிசையில் E32s ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இந்த போன் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இந்த போன் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த போனின் அறிமுகம் அதிவிரைவில் நடக்கும் என … Read more

“இந்த அரசு எதுவும் அறிவிக்கவில்லை” – கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கோவையில் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாத ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக் கோரி மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துகழக தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட தலைவர் … Read more

‘அரசியல் தெரியாவிட்டால் சமைக்கப் போங்க’ – சுப்ரியா சூலேவை சாடிய பாஜக தலைவர்; குவியும் கண்டனங்கள்

மும்பை: “அரசியல் தெரியாவிட்டால் சமையல் செய்யப் போங்கள்” என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலேவை விமர்சித்த மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசிக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், கட்சிக் கூட்டத்தில் பேசிய சுப்ரியா சூலே, “மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஒருமுறை டெல்லிக்குச் சென்றார். அங்கு யாரையோ சந்தித்தார். அடுத்த இரண்டு நாட்களில் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி … Read more

காத்திருக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் வாங்கலாம், எடை பார்க்கலாம்… பெருங்களூருவில் வருகிறது அதிநவீன பேருந்து நிறுத்தங்கள்!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து வசதிகளையும் இருந்த இடத்தில் இருந்து பெறும் நிலை வந்துவிட்டது. இனி வரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் பல அதி நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் அமையவுள்ளது. பெருங்களூரு நகரத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் … Read more

'தமிழக மக்கள் பிரதமர் மோடியை மனதார வரவேற்கின்றனர்' – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து தமிழக மக்கள் பிரதமர் மோடியை மனதார வரவேற்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார்.மாலை 5 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கிறார். மேலும், ஆறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில், “துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் … Read more

“ராம ராஜ்ஜியம் அமைந்தால் தெலங்கானாவில் உருது மொழிக்கு தடை” – பாஜக மாநிலத் தலைவர் பேச்சால் சர்ச்சை

ஹைதராபாத்: “ராம ராஜ்ஜியம் அமைந்தால் தெலங்கானாவில் உருது மொழிக்கு தடை விதிக்கப்படும்” என அம்மாநில பாஜக தலைவரும் கரீம்நகர் தொகுதி எம்.பி. பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் “நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு மதரஸாக்கள் தான் காரணம். மதரஸாக்கள் தீவிரவாத பயிற்சிக் கூடங்களாக செயல்படுகின்றன” என்றும் கூறினார். கரீம்நகரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பண்டி சஞ்சய் குமார் கலந்து கொண்டார் அதில் அவர் பேசுகையில், “இந்த நாட்டில் எப்போது குண்டு வெடிப்பு நடந்தாலும் அதன் பின்னணியில் … Read more