பிரதமர் மோடி வருகை: சென்னைவாசிகள் தவிர்க்க வேண்டிய சாலை வழிகள் எவை?

சென்னை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஈ.வெ.ரா சாலை, அண்ணா சாலை, எஸ்.பி படேல் சாலை, ஜி.எஸ்.டி சாலை ஆகிய சாலைகளில் மக்கள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் மாலை சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் சாலை … Read more

காங்கிரஸிலிருந்து விலகியது கஷ்டம்தான் – மனம் திறந்த கபில் சிபல்

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் விலகினார். அவர் நடக்கவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஆதரவில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இந்நிலையில் விலகிய பிறகு முதன் முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சி அளித்த நேர்காணலில் “தான் காங்கிரஸில் கட்சியிருந்து விலகிய கஷ்டமான விஷயம்தான். ஆனால், சில நேராமவது நாம் எல்லோரும் அவரவர்களது விஷயம் குறித்தும் யோசிக்க வேண்டும் அல்லவா?” எனக் கூறியுள்ளார். மேலும் கட்சியிருந்து விலகிய ஆசுவாசமாக இருக்கிறது. இனி நாடாளுமன்றத்தில் ஒரு … Read more

சிங்கார சென்னை 2.0 திட்டம்: கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை மாநகராட்சில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நட்புமிகு சென்னை, பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர் மிகு சென்னை, எழில் மிகு சென்னை, நலமிகு சென்னை, பாதுகாப்பான சென்னை, கல்வியில் சென்னை, சீர் மிகு சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை உள்ளிட்ட பிரிவுகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் வசதிக்காக பூங்கா மற்றம் … Read more

பிரதமர் மோடி ஹைதராபாத் வரும் முன்பே பெங்களூரு புறப்பட்டுச் சென்ற தெலங்கானா முதல்வர்

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் வர உள்ளா நிலையில் அவர் வரும் முன்பே சந்திப்பை தவிர்க்கும் விதத்தில், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இன்று காலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். இதனால் சந்திரசேகர ராவின் பாஜக மீதான கோபம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர் எஸ் கட்சிக்கும், பாஜக விற்கும் இடையே தீவிர அரசியல் மோதல்கள் நடைப்பெற்று வருகின்றன. சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாலும், ஹைதராபாத் மாநகராட்சி … Read more

'வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக வாழுங்கள்' – மணமக்களுக்கு முதல்வர் வாழ்த்து 

சென்னை: “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக வாழுங்கள்” என்று பாரதிதாசன் கூற்றை மேற்கோள்காட்டி மணமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 ஜோடிகளின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 33 வகையான இலவச சீர்வரிசைப் பொருட்களை மணமக்களுக்கு வழங்கினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திமுக சார்பில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பங்கேற்ற முதல்வார் மணமக்களுக்கு மாலை மற்றும் தாலி எடுத்து கொடுத்து மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார். … Read more

சீனர்களுக்கு விசா தர லஞ்சம் பெற்றதாக புகார்: கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராக சிபிஐ சம்மன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறைஅமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம்பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. பஞ்சாபில் டிஎஸ்பிஎல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத் தர, டிஎஸ்பிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது … Read more

ஏற்காட்டில் 5 லட்சம் மலர்களைக்கொண்டு கண்கவர் மலர்ச் சிற்பங்கள்; கோடைவிழா மலர்க் கண்காட்சி தொடக்கம்: பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: ஏற்காட்டில் கோடைவிழா மலர்க் கண்காட்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மா.மதிவேந்தன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். வரும் 1-ம் தேதி வரை 8 நாட்களுக்கு இக்கண்காட்சி நடைபெறுகிறது. தமிழகத்தின் முக்கிய கோடை சுற்றுலாத் தளங்களில் ஒன்றான ஏற்காட்டில், ஆண்டுதோறும் கோடைவிழா மலர்க் கண்காட்சி பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை. இந்நிலையில், தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், ஏற்காடு அண்ணா பூங்காவில், 45-வது … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரே நாளில் குவிந்த ரூ.5.43 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நேற்று (மே 25) ஒரே நாளில் பக்தர்கள் ரூ.5.43 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து முடிந்ததால், நாடு முழுவதிலுமிருந்து திருமலைக்கு பக்தர்கள் படை எடுத்து வருகின்றனர். கரோனா பரவல் குறைந்ததும் பக்தர்கள் பழைய படி திருமலைக்கு வர தொடங்கி … Read more

டெக்சாஸ் தொடக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு – உலகை உலுக்கிய சம்பவத்தின் முழு விவரம்

டெக்சாஸ்: அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞரை போலீஸார் சுட்டுத் தள்ளினர். அமெரிக்காவில் அவ்வப்போது பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ராப்என்ற பெயரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு … Read more

'ஓவைசியை நம்பாதீர்' – முஸ்லிம் மக்களுக்கு பாஜக தலைவர் வேண்டுகோள்

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி நாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை யாரும் நம்ப வேண்டாம் என்று பாஜக தலைவர் ஹர்நாத் சிங் கூறியுள்ளார். ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஹர்நாத் சிங், “சுதந்திரத்திற்கு முன் நாட்டைப் பிரிக்க ஜின்னா என்ன செய்தாரோ அதேபோல் திட்டமிட்டு இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஓவைசி செய்கிறார். அவர் முஸ்லிம் மக்களை தவறாக வழி நடத்துகிறார். அவரை முஸ்லிம் மக்கள் நம்ப வேண்டாம். ஓவைசி நாட்டைத் துண்டாடும் போக்கை நிறுத்தாவிட்டால் அவர் … Read more