வட சென்னை அனல் மின் நிலைய 3-வது நிலை டிசம்பர் இறுதியில் தொடங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி 

சென்னை: வட சென்னை அனல் மின் நிலைய 3 -வது நிலை டிசம்பர் இறுதியில் வணிக ரீதியாக தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். “மின்னகம்” மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி இன்று அண்ணா சாலை மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள மின்னகம் மையத்தை நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிகையில்,” முதல்வரால் தமிழக மின் … Read more

நன்கு ஆலோசித்த பிறகே அக்னி பாதை திட்டம் அமல் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி: தனியார் ஊடக குழுமம் சார்பில் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பேசியதாவது: அக்னி பாதை திட்டம் மூலம் முப்படைகளுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் புரட்சிகரமான மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. ஆனால் சிலர் இது தொடர்பாக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர். இந்த புதிய திட்டம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சுமார் 2 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டது. … Read more

தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 24 கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகரில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் 24 கருட சேவை ஒரே இடத்தில் இன்று (19-ம் தேதி) வெகு விமரிசையாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சாவூரில் 24 பெருமாள் கோயில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி தஞ்சாவூர் உள்ள வைணவத் திருக்கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் … Read more

அடுத்தது நிலக்கரி: சத்தமில்லாமல் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி: 30% தள்ளுபடியில் வாங்கிக் குவிக்கும் இந்தியா

புதுடெல்லி: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடையை மீறி ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா தற்போது 30 சதவீத தள்ளுபடியில் நிலக்கரியையும் வாங்கி குவித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் 6 மடங்கு நிலக்கரி ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு … Read more

மேகதாது அணை விவகாரம்: எஸ்.கே ஹல்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: வேல் முருகன் வலியுறுத்தல்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர் நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் எஸ்.கே ஹல்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறும்போது, “காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்றும் அக்கூட்டத்தில் மேகதாது அணை குறித்தும் விவாதிக்கப்படும் என்று ஆணையம் கூறி இருந்தது. இதனையடுத்து, மேகதாது அணை பற்றி விவாதம் கூடாது என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், … Read more

இந்தியாவில் 12,899 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு: சிகிச்சையில்  72,474 பேர்

புதுடெல்லி: நாடுமுழுவதும் இன்று புதிதாக 12,899 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு தற்போது 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 847 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று 13 ஆயிரத்து 216 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கடந்த 113 நாளில் தினசரி பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 12,899 … Read more

ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் – இரு தரப்பிலும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடையே இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், இருதரப்பு ஆதரவாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கட்சியின் மூத்த தலைவர்களான தம்பிதுரை, கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். சென்னை வானகரத்தில் வரும் 23-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக, மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சித் தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் … Read more

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பரூக் அப்துல்லா மறுப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். இதையடுத்து, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனினும் முடிவு எடுக்கப்படவில்லை இதுகுறித்து பரூக் … Read more

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட விடமாட்டோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட விடமாட்டோம். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், மேகேதாட்டு அணைதிட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் கூறியிருப்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ள முதல்வர், இது தொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் குழு விரைவில் டெல்லி செல்லும் … Read more

“ஒருபோதும் லஞ்சம் வாங்கக் கூடாது” – 100-வது பிறந்தநாள் கொண்டாடும் தாயின் அட்வைஸை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

காந்தி நகர்: 100-வது பிறந்த நாளைக் கொண்டாடும் தாய் ஹீராபா மோடியை, குஜராத் காந்தி நகர் இல்லத்தில் நேற்று சந்தித்த பிரதமர் மோடி அவருக்குப் பாத பூஜை செய்து வணங்கினார். மேலும், தனது தாய் பற்றியும், ஏழ்மையில் அவருடன் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் வலைப்பதிவில் மோடி நினைவுகூர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது தந்தை தாமோதர்தாஸ் மோடி, குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்று குடும்பத்தை காப்பாற்றினார். வத்நகரில் சிறிய மண் சுவர் வீட்டில் நான் … Read more