மதுரை அருகே 3 ஏக்கரில் ஆக்ஸிஜன் பூங்கா: 1,500 மரங்களுடன் வேளாண் கல்லூரி உருவாக்கியதன் பின்புலம்
மதுரை: மதுரை அருகே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 3 ஏக்கரில் பிரமாண்டமான ‘ஆக்ஸிஜன் பூங்கா’ (Oxygen bio fuel park) அமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மனிதனுக்கு ஆண்டுக்கு 300 கிலோ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் கரோனா தொற்று பரவல் நேரத்தில்தான் உணரத் தொடங்கினர். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க ஆக்ஸிஜன் சேமிப்பு கொள்கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள், இளைஞர்கள் தற்போது ஆக்ஸிஜன் … Read more