"டிஜிட்டல் பொருளாதாரத்தை பேரழிவு என்றார்கள்; ஆனால் கதையே மாறிவிட்டது" – பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் புகழாரம்

“டிஜிட்டல் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியபோது பொருளாதார நிபுணர்கள் பலரும் இது மிகப் பெரிய பேரழிவாக அமையும் என்றனர். இரண்டு ஆண்டுகள் கடந்துபின்னர் கதையே மாறிவிட்டது. இந்தியா இன்று நுண் பொருளாதார தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதியில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. இதுதான் புதிய இந்தியா” என்று புகழ்ந்துள்ளார் நடிகர் ஆர்.மாதவன். பிரான்ஸில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கவுரத்திற்குரிய நாடாக இந்தியா பங்கேற்றுள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் … Read more

விடைத்தாள் திருத்துதல், கட்டிட பராமரிப்பு பணிகளால் தாமதம்: பள்ளிகளை ஜூன் இறுதியில் திறக்க திட்டம்

சென்னை: விடைத்தாள் திருத்துதல், கட்டிட பராமரிப்பு உள்ளிட்ட பணிகளால் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வியில் 2021-22 கல்வி ஆண்டில் 1-9 வகுப்புகளுக்கான பள்ளி வேலை நாட்கள் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தன. மே 14-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்துதல், மதிப்பெண் பதிவேடு தயாரிப்பு உள்ளிட்ட அலுவல் பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் மட்டும் இன்று (மே 20) … Read more

லாலு பிரசாத் யாதவ் மீது பாய்ந்தது புதிய ஊழல் வழக்கு: 15 இடங்களில் சிபிஐ சோதனை

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து பிஹாரில் ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. லாலு பிரசாத் யாதவ் மட்டுமல்லாது அவரது மகள் மிசா பாரதி உள்ளிட்ட குடும்பத்தினர் சிலர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. 1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு பிஹார் முதல்வராக இருந்தார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் … Read more

தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு

சென்னை: வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.3-ம், வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை ரூ.8-ம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பின்னர் இது … Read more

ஷாயி ஈத்கா மசூதி நிலத்தை கிருஷ்ணர் கோயிலிடம் ஒப்படைக்க கோரும் இந்துக்களின் சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசம் மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி நிலத்தை கிருஷ்ணர் கோயிலிடம் ஒப்படைக்கக் கோரும் சீராய்வு மனுவை மதுரா மாவட்ட நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றது. உத்தர பிரதேசத்தின் புனித நகரமான மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் உள்ளது. இந்த இடத்தில்தான் கிருஷ்ணர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இங்கு இருந்த பழமையான கிருஷ்ணர் கோயில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவால் கோயில் இடிக்கப்பட்டு அங்கு 13.37 … Read more

பேரறிவாளன் விடுதலை: தமிழகத்தில் காங்கிரஸ் அறப்போராட்டம் – வாயில் வெள்ளைத் துணி கட்டியபடி தொண்டர்கள் பங்கேற்பு

கடலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறப்போராட்டம் நடந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் … Read more

கியான்வாபி மசூதியில் மே 6, 7 -ம் தேதி நடந்த களஆய்வு – வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார் மிஸ்ரா

புதுடெல்லி: சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கில், கியான்வாபியில் மே 6, 7 -ல் நடத்தப்பட்ட களஆய்வின் அறிக்கையை முன்னாள் ஆணையர் அஜய் குமார் மிஸ்ரா சமர்ப்பித்துள்ளார். உத்தரப்பிரதேசம் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிப்பது தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. இதை விசாரிக்கும் வாரணாசியின் சிவில் நீதிமன்றம், கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதிக்குள் களஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது. இதன் கடைசிநாளில், மசூதியின் ஒசுகானா நடுவே சிவலிங்கம் இருப்பதாக, மசூதியின் ஒரு பகுதிக்கு … Read more

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 3 இடங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடத்தை காங்கிரஸூக்கு திமுக விட்டுக்கொடுத்துள்ளது. அதிமுக சார்பில் 2 இடங்களுக்கு வேட்பாளர்களை … Read more

கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: கால்நடைகளை ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் ஆந்திர அரசு புதிய திட்டத்தை நேற்று அமல்படுத்தியது. ‘டாக்டர். ஒய்.எஸ்.ஆர். கால்நடை ஆம்புலன்ஸ் சேவை’ என இத்திட்டத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை நேற்று காலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: மனிதர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இனி கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை … Read more

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்து தமிழகம், கேரளம் சாதனை – தேசிய சராசரியைவிட குறைவு

சென்னை: அத்தியாவசியப் பொருட்களின் விலையை தேசிய சராசரியை விட குறைவான அளவில் தக்கவைத்து தமிழகமும், கேரளாவும் சாதனை படைத்துள்ளன. நாட்டில் உள்ள மக்கள், தாங்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சேவைகளின் கட்டணங்களை கணக்கிடுவதே நுகர்வோர் விலைக் குறியீடு (கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸ்) என்பதாகும். இதை வைத்து நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமை கணக்கிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 6.2 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஏப்ரலில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது … Read more