சீன எல்லையில் பணியாற்றிய 2 ராணுவ வீரர்களை காணவில்லை

இடாநகர்: மிக நீண்ட காலமாக அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருவதால் அந்த மாநில எல்லையில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலின் தகலா எல்லைப் பகுதியில், ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த படையைச் சேர்ந்த பிரகாஷ் சிங் ராணா, ஹரேந்திர நெகி ஆகிய 2 வீரர்களை கடந்த மே 28-ம் தேதி முதல் காணவில்லை. பிரகாஷ் சிங் ராணா உத்தராகண்டின் ருத்ரபிரயாக் நகரைச்சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி … Read more

தமிழகம் முழுவதும் 51 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார்

சென்னை: தமிழகத்தில் உள்துறை, சுகாதாரத் துறை செயலர்கள் உட்பட 51 ஐஏஎஸ்அதிகாரிகள் ஒரேநாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலராக பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை செயலராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது, வணிகவரித் துறை ஆணையராக இருந்த கே.பணீந்திர ரெட்டி, உள்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்தஎஸ்.கே.பிரபாகர், வருவாய் நிர்வாகஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலராக உள்ள முகமது நசிமுத்தீன், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலராகவும், சுகாதாரத்துறை … Read more

கிராம சுயாட்சியில் புதிய மைல்கல்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் கிராம சுயாட்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, நாட்டின் வளர்ச்சிக்காக கிராம தலைவர்கள் ஆற்றிவரும் பங்கை பாராட்டி அவர்களுக்குப் பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். தங்கள் … Read more

இலங்கையில் காற்றாலை திட்டம் | அதானி குழுமம் தேர்வானதற்கு பொறியாளர்கள் சங்கம் எதிர்ப்பு

கொழும்பு: இலங்கை மன்னாரில் 500 மெகாவாட் காற்றலைத் திட்டத்தை அதானிக் குழுமத்துக்கு நேரடியாகவழங்க இலங்கை நாடாளு மன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது. அதானிக்கு மின் உற்பத்தித் திட்டத்தை ஒதுக்கீடு செய்யவே சட்டத்தில் அவசரமாக திருத்தம் செய்வதாக இலங்கை மின் வாரிய பொறியாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. இதையெடுத்தே மின் வாரியத் தலைவர் பெர்டினான்டோவை பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு விசார ணைக்கு அழைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்தவிசாரணையில் ‘எதன் அடிப்படையில் 500 மெகாவாட் திட்டத்துக்கு அதானி … Read more

மின் வாரியத்தில் மீண்டும் பராமரிப்பு பணிகள் தொடக்கம்: மின்தடை தவிர்க்கப்படும் என தகவல்

சென்னை: மின் வாரியத்தில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், அடிக்கடி மின்தடை ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றுமின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக மின் வாரியம், துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி,மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. மின் வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் … Read more

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி மீது புகார் | கண்ணீருடன் பேட்டியளித்த ஸ்வப்னா சுரேஷ் மயங்கி விழுந்தார்

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புக்கான என்ஐஏ, அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் அண்மையில் நீதிபதியிடம் அளித்த ரகசிய … Read more

டிஎன்பிஎஸ்சி தலைவராக முனியநாதன் நியமனம்

சென்னை: தமிழக அரசுத் துறைகளில் உள்ளகாலி பணியிடங்கள் தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி தலைவராக 2020-ல் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த ஜூன் 9-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்காலிக அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினரான ஐஏஎஸ் அதிகாரிசி.முனியநாதன், தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே நாகை மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் … Read more

நாமக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்து குறித்து விசாரிப்பதற்காக, ராசிபுரம் காவல் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 49-ல் … Read more

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து அண்ணாமலை கேட்கவில்லை: சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுதினம் திருநெல்வேலி ரஹ்மத் நகரில் அனுசரிக்கப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பெருஞ்சித்திரனார் புகைப்படத் துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத மோதல்களை தூண்டி நாட்டில் பிரிவினை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கடன் 90 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. 7,000 கோடி ரூபாயை இந்தியா இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன். 18 … Read more

பள்ளிகள் திறப்பு | சென்னை, பிற ஊர்களிலிருந்து கூடுதலாக 1450 பேருந்துகள் இயக்கம்

சென்னை: நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்க உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று (ஜூன் 12)கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ். எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் கூடுதலாக 400 பேருந்துகள் கடந்த வாரம் … Read more