காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை: ராணுவம் நடவடிக்கை

தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். “இவர்கள் மூவர் உள்ளூர்வாசிகள். லக்‌ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாத சதிச் செயல்களில் ஈடுபட்டுவந்தனர். கடந்த மே 13 ஆம் தேதி, ரியாஸ் அகமது என்ற காவலரை சுட்டுக் கொன்றதில் இவர்களில் ஜுனைத் ஷீர்கோர்ஜி என்பவருக்கு தொடர்பு இருந்தது. இவரைத் தவிர ஃபாசில் நாசிர் பட், அகமது மாலிக் ஆகிய இருவரும் பல்வேறு தீவிரவாத … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்: மார்க்சிஸ்ட்

தனிச்சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமென்று கடலூரில் மார்க் சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கடலூரில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் பெண்கள் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கிய சம்பவமாக உள்ளது. இந்தச் சம்பவத்தை அரசு ஒரு எச்சரிக்கை மணியாகஎடுத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக் … Read more

மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களில் பாஜக வெற்றி – 'கர்நாடகாவின் பெரிய பரிசு' என பிரதமர் மோடி மகிழ்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின. சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 112 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் (ஒருவர் வெற்றிபெற 44 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை) 2 வேட்பாளர்களின் வெற்றி உறுதியானது. அதேபோல காங்கிரஸுக்கு 77 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் ஒருவரின் வெற்றி உறுதியானது. இதனால் 4-வது இடத்தைக் கைப்பற்ற காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியவை கடுமையாக போராடின. இந்நிலையில், காங்கிரஸ் வெற்றிபெற உதவுமாறு … Read more

வெளி மாவட்ட மக்களுக்கே அதிகம் பயன்படும் தேனி ரயில்: பகலிலும் இயக்க உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு

வெளிமாவட்டங்களில் இருந்து தேனி வந்து சுற்றுலாத்தலம் மற்றும் பாரம்பரிய கோயில்களை தரிசிக்கும் வகையிலேயே மதுரை-தேனி ரயிலின் நேர அட்டவணை அமைந்துள்ளது. இதனால் உள்ளூர் மக்களுக்கு இந்த ரயில் பெரியளவில் பலன் தராத நிலையே உள்ளது. அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்து, மதுரையில் இருந்து தேனிக்கு கடந்த மாதம் 26-ம் தேதி ரயில் சேவை தொடங்கியது. மதுரையில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்கு கிளம்பும் ரயில் (06701) தேனிக்கு 9.35 மணிக்கு வருகிறது. அதன்பிறகு, மாலை … Read more

நூபுர் சர்மா சர்ச்சை | வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – புல்டோசர் படத்துடன் உ.பி. அரசு எச்சரிக்கை

லக்னோ: நூபுர் சர்மாவின் சர்ச்சை கருத்து விவகாரத்தில் உ.பி. நகரங்களில் நேற்று முன்தினம் வன்முறை மோதல்கள் ஏற்பட்ட நிலையில், வன்முறையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ‘புல்டோசர்’ படத்துடன் உ.பி. அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கத்தார், சவுதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பாஜகவில் இருந்து … Read more

ஒரு கட்டு வாழை இலை ரூ.4,000 வரை விற்பனை: திருமணம், திருவிழாக்களால் விலை உச்சம்

கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் களை கட்ட ஆரம்பித்துள்ளதால் ஒரு கட்டு வாழை இலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்துக்கு விலை உயர்ந்து விற்பனையாகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான், திருமங்கலம், வாடிபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. உள்ளூர் விற்பனை போக இங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் வாழை இலைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ‘கரோனா’ ஊரடங்கு காலத்தில் வாழை இலைகளுக்கு தேவை குறைந்ததால் 250 இலைகள் கொண்ட ஒரு கட்டு … Read more

இந்தியா கரோனா நிலவரம்: 8,582 பேருக்கு தொற்று உறுதி; 4 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 8,582 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,32,22,017 என்றளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு, உயிரிழந்தோர், குணமடைந்தோர் விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் புதிதாக 8,582 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 4,32,22,017 . கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உயிரிழப்பு: 4. இதுவரை கரோனாவால் … Read more

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் சிறார்களுக்கான சிறப்பு பயிற்சி மையங்கள் மீண்டும் இயங்குமா?

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் சிறார்களுக் கான சிறப்பு பயிற்சி மையத்தை மத்திய அரசு நிரந்தரமாக மூடியது. இந்த மையத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என திட்ட பணியாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். வறுமையின் காரணமாக, சிறார்களை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புவதை தடுக்ககடந்த 1986-ம் ஆண்டு குழந்தைத்தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் குழந்தைத்தொழிலாளர் தடுப்புப் பிரிவினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், சுகாதார மற்றும் தொழிலக பாதுகாப்புத்துறையினர், தொழிலாளர் … Read more

2 நாட்களில் 400 வழக்குகளை விசாரித்த நீதிபதி ஷிண்டே – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராட்டு

மும்பை: நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் காலை 10.30 முதல் மாலை 4.30 வரை செயல்படுவது வழக்கம். சில நாட்களில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக இரவு வரை செயல்படுவதும் உண்டு. ஆனால் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே கடந்த 9-ம் தேதி 190 வழக்குகளையும் 10-ம் தேதி 200-க்கும் மேற்பட்ட வழக்குகளையும் விசாரித்துள்ளார். இந்த 2 நாட்களிலும் அவர் காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பணிபுரிந்துள்ளார். இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் … Read more

சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: ஓபிஎஸ் பட்டியலிட்டு விளக்கம்

சென்னை: “சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது; ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது; ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லல் அவதியை எடுத்துக்காட்டுவது; … Read more