கரோனா 3-வது அலைக்குப் பிறகும் இந்திய பொருளாதாரம் வலிமையுடன் உள்ளது – அமெரிக்க நிதி அமைச்சகம் தகவல்

வாஷிங்டன்: கரோனா பெருந்தொற்று பரவல் 3-வது அலை வீசிய பிறகும் இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலிமையுடன் உள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் 2-வது அலை தீவிரமான பாதிப்பை 2021 மத்தியில் ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார மீட்சி தாமதமானதாக அரையாண்டு அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. எனினும் கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் பொருளாதார … Read more

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம்: இந்தியா விலகல்

புதுடெல்லி: ஈரான் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட 13 மடங்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருப்பதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு குழுவான சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) அண்மையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் அதிக யுரேனியத்தை வைத்திருப்பதைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 30 நாடுகள் ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகமையில் தீர்மானத்தை இயற்றின. ஈரானை எதிர்த்து 30 நாடுகள் வாக்களித்தன. ஆனால் லிபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் … Read more

தமிழகம் முழுவதும் ஓராண்டில் 2,042 கோயில்களில் திருப்பணிகள் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் 2,042 கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக கோயிலை தொல்லியல் வல்லுநர் நேரில் ஆய்வு செய்து 100 மற்றும் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிடப்பட்டது. வல்லுநர் குழு பரிசீலனை அதைத்தொடர்ந்து, கோயில் … Read more

மாநிலங்களவைத் தேர்தல் | மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜக வெற்றி – ஆளும் சிவசேனா, தேசியவாத காங். கூட்டணிக்கு பின்னடைவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஏற்கெனவே தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ்சாப், தெலங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் இருந்து 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வாகினர். கர்நாடகா, ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் 16 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள 4 இடங்களில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட … Read more

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 12-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், ராணிப்பேட்டை, … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | டெல்லியில் ஆலோசனை கூட்டம் – சோனியா, ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாததை வெளிச்சம் போட்டுக் காட்டின. இந்த சூழ்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான … Read more

கரோனா பாதிப்பு | அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை – இன்று ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்

புதுடெல்லி/சென்னை: நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் கரோனா தாக்கத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடை பெற்றது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி கரோனா பாதிப்பு 108 நாட்களுக்குப் பிறகு 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4,32,13,435-ஆக உயர்ந்துள்ளது. கடந்த … Read more

பொதுமக்களின் போக்குவரத்தாக மாறிவரும் சென்னை மெட்ரோ – ஒரு பின்புலப் பார்வை

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால், ஓர் இடத்தில் மட்டும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. விளையாடச் செல்பவர்கள் தொடங்கி பணிக்குச் செல்பவர்கள் வரை அனைவரும் அங்கு இருந்தனர். மற்றொரு நாள் இரவு 7 மணி. சென்னையில் முக்கிய இடத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். அந்த வரிசையில் நின்று நானும் அதை வாங்கிக் கொண்டு, அந்த இடத்திற்குச் சென்றேன். இந்த இரண்டு காட்சிகளும் நான் சென்னை … Read more

பள்ளிப் பெருந்து ஓட்டுநர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஓசூர் கோட்டாட்சியர்

ஓசூர்: பள்ளிப் பேருந்து ஓட்டுனர்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஓசூர் கோட்டாட்சியர் தேன்மொழி வலியுறுத்தியுள்ளார். ஓசூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளுக்கான சிறப்பு ஆண்டு ஆய்வுப்பணி கோட்டாட்சியர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஓசூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி வரவேற்புரை … Read more

'எதிர்க்கட்சியின் போராட்டங்கள் எந்த பலனையும் தரப்போவதில்லை' – தங்கக்கடத்தல் விவகாரத்தில் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: மக்கள் இடதுசாரி அரசாங்கத்துடன் இருக்கிறார்கள், இதனால் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்திவரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கம் … Read more