முருக பக்தர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்குக: தெற்கு ரயில்வேக்கு எம்.எம்.அப்துல்லா எம்.பி கோரிக்கை

புதுக்கோட்டை: தென் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரள்வதால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு மாநிலங்களை எம்.பி எம்.எம்.அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: “தமிழகத்தில் உள்ள பழநி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் நடைபெறும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பெரும்பாலும் … Read more

இல்லம் தேடிக் கல்வித் திட்டச் செயல்பாடுகளில் முன்மாதிரியாக திகழும் தாயனூர்

திருச்சி: தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டச் செயல்பாடுகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி தாயனூர் கிராமம் முன்மாதிரியாக விளங்கி வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களுக்கு கற்றலில் ஏற்பட்ட இழப்பை சரிசெய்யும் வகையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம்தேடிக் கல்வி என்ற திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் தாயனூர் கிராமத்தில் மாணவர்களுக்கு பாடத் திட்டத்தையும் தாண்டிநல்லொழுக்கம், பேச்சுத் திறன், … Read more

4 கை, 4 காலுடன் பிறந்த சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு நடிகர் சோனு சூட் உதவி

மும்பை: பிறவியிலேயே நான்கு கை, நான்கு கால் கொண்ட சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவிய நடிகர் சோனு சூட்-டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழில், ‘கள்ளழகர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சோனு சூட். தொடர்ந்து மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தியிலும் நடித்து வரும் சோனு சூட், கரோனா காலகட்டத்தில் செய்த உதவிகள், இந்தியா முழுவதும் அவர் புகழைப் பரப்பின. இந்நிலையில், நான்கு கை, நான்கு கால் கொண்ட சிறுமியின் … Read more

வைகை கரையில் வடிகாலின்றி கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவர்: மழைக் காலத்தில் மிதக்கும் மதுரை சாலைகள்

மதுரை: மதுரை நகர் பகுதியில் ஓடும் வைகை ஆற்றங்கரையில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளது. வடிகாலின்றி கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரால் மழைநீர் வழிந்தோட முடியாமல் நகர் பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் சாலைகள் தண்ணீரில் மிதக்கும் அவலம் ஏற்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான வருஷ நாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு, 240 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கலந்து, பின் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. வைகை … Read more

பினராயி விஜயன் ராஜினாமா கோரி காங்கிரஸ் 3-வது நாளாக போராட்டம் – போலீஸ் தடியடியால் பதற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி காங்கிரஸ் தொடர்ந்து 3-வது நளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்திவரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் … Read more

சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கை: இன்சுலின் வாங்கக்கூட காசில்லை என பெற்றோர் வேதனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையத்தில் வசித்து வருபவர் ரமேஷ். பனியன் நிறுவன தொழிலாளி. மனைவி வித்யஜோதி. இவர்களது மகன் மோகித் (7), மகள் விதர்சனா (4). சிறுவயதிலேயே அண்ணன், தங்கை இருவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பெற்றோர் கூறியதாவது: இரவு நேரங்களில் மோகித் அதிக அளவில் சிறுநீர் கழித்ததால், சந்தேகமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தோம். அதில் ரகம் 1 எனப்படும் சர்க்கரை … Read more

நூபுர் சர்மா சர்ச்சையால் வன்முறை: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘அலர்ட்’

புதுடெல்லி: நூபுர் சர்மா சர்ச்சையின் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் கண்காணிப்புடன் உரிய முறையில் செயலாற்ற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. முகமது நபிகள் குறித்து பாஜகவின் நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்தியப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் சமூக ஊடகங்கள் மூலம் … Read more

‘இடைநில்லாக் கல்வி… தடையில்லா வளர்ச்சி’ இலக்கை நோக்கி பயணிப்போம்: அன்பில் மகேஸ் பெய்யாமொழி

சென்னை: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் “இடைநில்லாக் கல்வி… தடையில்லா வளர்ச்சி” என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை: “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து” என்ற திருக்குறளுக்கு ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் … Read more

மாநிலங்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி

புதுடெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் கர்நாடகாவில் போட்டியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி பெற்றார். அங்கு 3 இடங்களை பாஜகவும் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றியுள்ளன. அதேநேரத்தில் ராஜஸ்தானில் 3 இடங்களில் காங்கிரஸும் ஒரு இடத்தை பாஜகவும் கைப்பற்றின. தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ல் தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 … Read more

“ஆன்மிக பக்தி அல்ல… உங்களுக்கு இருப்பது தனியார் பக்தி மட்டும்தான்” – ரயில்வே மீது சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயில் இயக்கப்படுவது தொடர்பான உத்தரவைப் திரும்ப பெற வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார். ஜூன் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம்என்சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ரயில் இயக்கம் தொடர்பாக … Read more