திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக மே மாதம் ரூ.130 கோடி வருவாய்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடியை தாண்டியுள்ளது. பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் உண்டியல் வருமானமும் கனிசமாக உயர்ந்துள்ளது. கோயிலுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடி வரை உண்டியல் வருவாய் கிடைத்துவரும் நிலையில் … Read more

ஆட்டோ கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து துறை பரிந்துரை – அரசு சார்பில் முன்பதிவு செயலி வடிவமைக்கவும் திட்டம்

சென்னை: பேருந்துக்கு அடுத்தபடியாக அதிகமானோர் ஆட்டோவை நாடினாலும், கட்டணம் விஷயத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையேயான தகராறு வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, ஆட்டோ கட்டணம் தொடர்பான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கு தலா ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50, இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து போக்குவரத்துத் … Read more

'உங்கள் தகவலுக்கு, இது எம்எல்ஏவின் கார்' – காவலர், பத்திரிகையாளரை தாக்கிய பாஜக எம்எல்ஏவின் மகள்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளியின் மகள் ரேணுகா (26). இவர் பிஎம்டபுள்யூ காரில் பெங்களூருவில் உள்ள குயின்ஸ் சாலையில் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் போலீஸ் அதிகாரியின் வாகனத்தை முந்திக்கொண்டு சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, ”இந்த காரின் மீது 13 வழக்குகள் உள்ளன. இப்போது 14-வது முறையாக போக்குவரத்து விதிமுறை மீறப்பட்டிருக்கிறது’’ எனக்கூறி அபராதம் கேட்டனர். ஆனால், ரேணுகா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு … Read more

விரைவு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோ மெட்ரிக் மூலம் ஊழியர்களின் வருகையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளை மேலாளர் உள்ளிட்டோருக்கு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்பப் பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் வருகைப் பதிவு முறை பயோ மெட்ரிக் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இவர்கள் தங்களுக்கான பணி நேரத்தின் அடிப்படையில் பயோ மெட்ரிக் … Read more

மக்கள் நலனே அரசின் தலையாய கடமை – குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

நவ்சாரி: மக்கள் நலனே அரசின் தலையாய கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நவ்சாரி மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான குத்வேலில் நடந்த விழாவில் ரூ.3,050 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் பேசியதாவது: இங்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு – ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழுவின் முழுவிவரம்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இணையதள சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த ஆண்டு பிப்.25-ம் தேதி ஆன்லைன் … Read more

அகமதாபாத்தில் இஸ்ரோ புதிய வளாகம்

அகமதாபாத்: அகமதாபாத்தில் இஸ்ரோவின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். அத்துடன் நவ்சாரி பகுதியில் ஏ.எம்.நாயக் சுகாதார வளாகம், நிராலி பன்னோக்கு மருத்துவமனையையும் பிரதமர் திறந்துவைத்தார். அங்கு அவர் பேசும்போது, ‘‘ஏழைகளின் நலன் கருதி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் குஜராத்தில் மட்டும் 41 லட்சம் பேர் பலன் பெற்றுள்ளனர். குஜராத்தில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் 1,100-ல் இருந்து 6,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 30-ஐ தாண்டியுள்ளது. கடந்த … Read more

'உடல் உறுப்புகள் செயலிழப்பு' – பர்வேஸ் முஷாரப்புக்கு வந்த அமிலோய்டோசிஸ் பாதிப்பு

துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் (78) மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 1998-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரப் பதவியேற்றார். அவருக்கும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன்காரணமாக 1999-ம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் நவாஸ் ஷெரீப் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாகிஸ்தானின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்த முஷாரப், 2001-ம் ஆண்டு ஜூனில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். 2008 ஆகஸ்ட் … Read more

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை; இனிமேல் இந்த கேள்வியை கேட்காதீர்கள்: இபிஎஸ்

மயிலாடுதுறை: “சசிகலா அதிமுகவில் இடம்பெறவில்லை, கட்சியில் உறுப்பினரும் இல்லை. அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. எனவே இந்த கேள்வியை தயவுகூர்ந்து இனிமேல் கேட்காதீர்கள்” என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மயிலாடுதுறை சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவைத் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தருமபுரம் ஆதீனத்தைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: ” டிடிவி தினகரனை விட்டு விட்டோம், சசிகலாவை விட்டுவிட்டோம். பத்திரிகைகள்தான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். டிடிவி … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் ‘சோப்தார்’ நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் ‘சோப்தார்’ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண் நீதிபதிகளுக்கான ‘சோப்தாராக’ (செங்கோல் ஏந்தி செல்பவர்) செயல்படுவார். அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கால்பதித்து வருகின்றனர். நீதித் துறையிலும் பல்வேறு பணியிடங்களில் பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து நீதிமன்ற அறைக்குச் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக ‘சோப்தார்’ எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் … Read more