தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் வேகமாக பரவும் உருமாறிய ஒமைக்ரான் : மக்கள் நல்வாழ்வு துறை செயலளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தாவர்களிடம் இருந்து வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்பதால் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி கிடங்கில் தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், "கரோனாவின் 3 அலைகளை முறியடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா மட்டுமல்லாமல் பிரேசில்,தென்னாப்பிரிக்கா … Read more

மேகாலயாவில் கனமழையினால் நிலச்சரிவு; 4 பேர் பலி: பாலங்கள் சேதம்

மேகாலயாவின் கரோ பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 4 பேர் பலியாகினர். இவர்களில் மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், நிலச்சரிவு காரணமாக கரோ பகுதியில் உள்ள முக்கிய பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதில் ஜெபல்கிரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.கரோனாவின் பிற பகுதிகளான துரா, தாலு, புராகாஸியா ஆகிய பகுதிகளும் கனமழையினால் பலத்த சேதம் அடைந்துள்ளன. அடுத்த சில நாட்களுக்கு இப்பகுதியில் கனமழை … Read more

ஜெயங்கொண்டம் நில உரிமையாளர்களிடம் திமுக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழக பாஜக

சென்னை: “ஜெயங்கொண்டம் தனியார் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக 25 வருடங்களுக்கு முன் கையகப்படுத்திய நிலங்களை திருப்பி ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மக்களை வாட்டி, வதைத்து வாழ்வாதாராத்தை கேள்விக்குறியாக்கியதற்கு இந்த நில உரிமையாளர்களிடம் திமுக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஜெயங்கொண்டம் தனியார் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக 25 வருடங்களுக்கு முன் கையகப்படுத்திய நிலங்களை உரிமையாளர்களிடமே திருப்பி ஒப்படைக்க … Read more

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ரூ.270.15 கோடி மதிப்பிலான புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.270.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் … Read more

அமேசான் காடுகள் அழிப்பைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல்பாடு: அமெரிக்கா – பிரேசில் ஒப்புதல்

வாஷிங்டன்: அமேசான் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதில் ஒன்றிணைந்து செயல்பட அமெரிக்கா – பிரேசில் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், “லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அமெரிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரி ஜோ பைடனும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின்போது, அமேசான் காடுகளை மேலும் அழிக்கப்படுவதைத் தடுப்பதில் ஒன்றிணைந்து செயல்பட இரு அதிபர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், உக்ரைன் போர் குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்ட கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Source link

மாநிலங்களவைத் தேர்தல்: மகராஷ்டிராவில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸுக்கு வாக்களிக்க ஒவைசி கட்சி முடிவு

மும்பை: மகராஷ்டிராவில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸுக்கு வாக்களிக்க ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 எம்பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 16 எம்பி பதவிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. Source link

வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை: சீனா

நியூயார்க்: வடகொரியா மீண்டும் ஒருமுறை ஏவுகணை பரிசோதனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நாவுக்கான சீன தூதர் ஜாங் ஜுன் கூறும்போது, ‘வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அணு ஆயுத ஒழிப்பு என்பது சீனாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். Source link

ஆன்லைன் ரம்மி தடைக்கு புதிய சட்டம்: கே.சந்துரு குழு 2 வாரங்களில் பரிந்துரைகளை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் … Read more

கரோனா கட்டுப்பாடுகள் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பதே கள நிலவரம்: ஓபிஎஸ்

சென்னை: “முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், அவை சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் கள நிலவரம். எனவே, கரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கரோனா தொற்று நோயின் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை ஆகியவை முடிந்து, கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் … Read more