மண் வளத்தை மேம்படுத்த மாநில அரசு முழு நேர்மையுடன் செயலாற்றும்: சத்குரு முன்னிலையில் ம.பி. முதல்வர் உறுதி

போபால்: ”மண்ணில் 3 – 6% கரிம வளத்தை அதிகரிக்க எங்களுடைய அரசு முழு நேர்மையுடன் செயல்படும்” என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சத்குரு முன்னிலையில் வாக்குறுதி அளித்தார். இது குறித்து ஈஷா வெளியிட்ட தகவல்: மண் காப்போம் இயக்கம் சார்பில் போபாலில் நேற்று (ஜூன் 9) நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ”சத்குரு ஓர் ஆன்மிக மகான். அவர் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான சுற்றுச்சூழல் அக்கறையையும், ஆன்மிக செயல்பாடுகளையும் … Read more

அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, “வியாழக்கிழமை மதியம் மேரிலாண்டின் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து போலீஸார் … Read more

புதுச்சேரியில் அனுமதி மறுப்பால் சென்னைக்குப் புறப்பட்ட சுற்றுலா சொகுசு கப்பல்: கேசினோ சூதாட்ட புகாரால் எதிர்ப்பு

புதுச்சேரி: கேசினோ சூதாட்ட புகாரால் எழுந்த எதிர்ப்பால் புதுச்சேரி வந்த சென்னை சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சொகுசு கப்பல், கடலிலேயே நின்று விட்டு சென்னைக்கு மீண்டும் புறப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை – விசாகப்பட்டினம் – புதுச்சேரி இடையே இயங்கும் தனியார் சொகுசு கப்பல் சுற்றுலாவைத் தொடங்கி வைத்திருந்தார். இந்தக் கப்பல் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கு வந்து, … Read more

அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடும் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும்: பிரேமலதா

கடலூர்: தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கைகளை வெளியிடும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அதை நிரூபிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இரண்டாயிரம் ஏக்கர் விவசாயிகளிடம் இருந்து நிலம் எடுக்கப்பட்டு உரிய தொகை வழங்கப்படவில்லை. உரிய தொகை வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் சகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் … Read more

சிபிஐ இயக்குநர் நியமனத்துக்கு எதிராக வழக்கு: மத்திய அரசு, சிபிஐ-க்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மும்பை: சிபிஐ இயக்குநரக ஐபிஎஸ் அதிகாரி சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் சிபிஐ, மத்திய அரசு மற்றும் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலுக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1985-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியும் மகராஷ்டிர காவல்துறை இயக்குநர் பணி அனுபவம் கொண்டவருமான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு மே மாதம் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்துக்கு எதிராக மகராஷ்டிர காவல் துறையின் முன்னாள் கூடுதல் ஆணையர் ராஜேந்திர திரிவேதி … Read more

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விசிக அறிவிப்பு

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், … Read more

16 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு இன்று தேர்தல்: எங்கெல்லாம் கடும் போட்டி?

புதுடெல்லி: மாநிலங்களவையில் 16 எம்.பி. பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 எம்பி, பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 16 எம்.பி. பதவிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ராஜாஸ்தானில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதில் 2 எம்பி பதவிகளை ஆளும் காங்கிரஸ் கைப்பற்றும் என்றும், … Read more

சென்னை, மயிலாடுதுறை உள்பட 9 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு குறித்து தீவிர விசாரணை

சென்னை: சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டன. மேலும், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு குறித்து சிலரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனையில் செல்போன், சிம் கார்டுகள், ஆயுதங்கள் மற்றும் சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு காரை மறித்து போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, காரில் … Read more

அவதூறு கருத்து பற்றி ஈரான் அமைச்சர் பேசினாரா? – மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்தோலியான் டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இரு நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் சந்தித்துப் பேசினார். அப்போது, ஈரானில் இந்தியா கட்டமைத்து வரும் சாபஹார் துறைமுகம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். சர்வதேச, பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி: ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ச

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பசில் ராஜபக்ச கடந்த ஆண்டு ஜூன் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரையில் இலங்கையின் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் நிதியமைச்சர் பதவியிலியிருந்து அவர் ராஜினாமா … Read more