இந்தித் திணிப்பைக் கண்டித்து ஜிப்மர் வாயிலில் மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: புதுச்சேரி ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து அதன் நுழைவாயிலில் மதிமுக சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை (மே10ல்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீது இந்தியைத் திணித்துவிட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி … Read more

இந்தூர் சம்பவம் | காதலியைப் பழிவாங்க கட்டிடத்துக்கு தீ; 7 பேர் பலியான வழக்கில் இளைஞர் கைது

இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் தீ விபத்தில் 7 பேர் பலியான நிலையில், தனது காதலைப் புறக்கணித்தப் பெண்ணை பழிவாங்க இளைஞர் ஒருவர் அந்தக் கட்டிடத்துக்கு தீ வைத்தது அம்பலமாகியுள்ளது. சுபம் தீக்சசித் (சஞ்சய்) என்ற 28 வயதான இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் அவரது சொந்த ஊர் எனத் தெரியவந்துள்ளது. நடந்தது என்ன? மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று (மே 7) அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ … Read more

தமிழகம் முழுவதும் ஷவர்மா கடைகளில் ஆய்வு தொடரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சேலம்: நமக்கான உணவு நிறைய உண்டு. அதனை விடுத்து, ஷவர்மா மாதிரி புதிய புதிய பெயர்களில் வரும் உணவுகளை வாங்கி உண்டு உடலை கெடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு தொடரும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் இன்று 1 லட்சம் மையங்களில் 29-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் … Read more

எல்லைப்புற சாலை கட்டுமானத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துங்கள்: பிஆர்ஓ அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

புதுடெல்லி: எல்லைப்புற சாலை கட்டுமானப்பணிகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். எல்லைப்புற சாலைகள் நிறுவனம் (பிஆர்ஓ) 1960-ம் ஆண்டு மே 7-ம் தேதி நிறுவப்பட்டது. இதன் 63-வது ஆண்டு தினம் டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் வடக்கு எல்லையில் கடந்த சில ஆண்டுகளாக சீனர்களின் இருப்பு அதிகரித்துள்ளது. மலைப்பாங்களான இடங்களில் கட்டுமானப் … Read more

பட்டினப்பிரவேசத்துக்கு தடை நீக்கம்: மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர்

சென்னை: தருமபுரம் ஆதீன திருமடத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு அனுமதி மறுத்து விதிக்கப்பட்ட தடையாணை விலக்கிக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குருமுதல்வர் குருபூஜையையொட்டி வருகின்ற 22-ம் தேதி நடைபெறவுள்ள பட்டினப்பிரவேச … Read more

அசானி புயலால் ஆந்திரா, ஒடிசா, மே.வங்கத்தில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் அசானி புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க ஆகிய 3 மாநிலங்களில் வரும் செவ்வாய்க்கிழமை ( மே 10) தொடங்கி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தப் புயல் மேலும் வலுவடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் புயல் ஒடிசா, ஆந்திராவில் கரையைக் கடக்காது என்றும் மாறாக கடற்கரையை ஒட்டியே நகர்ந்து சென்று வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த … Read more

'ஆன்லைன் சூதாட்ட தொடர் சாவுகளை அரசு வேடிக்கை பார்ப்பதா' – அன்புமணி கண்டனம்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் தமிழக அரசு தொடர் சாவுகளை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சென்னை அம்பத்தூரில் மத்திய அரசு அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் சரவணக்குமார் ஆன்லைன் … Read more

தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு விநியோகம் – ஜம்மு காஷ்மீரில் 19 இடங்களில் விசாரணை அதிகாரிகள் சோதனை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மொபைல் சிம் கார்டு விற்பனையாளர்கள் சிலர், சிம் கார்டு விற்பனையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கற்பனையான பெயரில் சிம் கார்டு வழங்கியது, ஒருவரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி மற்றொருவருக்கு சிம் கார்டு வழங்கியது என இவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சிம் கார்டுகளை தீவிரவாதிகள், அவர்களின் கையாட்கள், போதைப் பொருள் கடத்துவோர் மற்றும் பிற கிரிமினல்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்த நிலையில் அதுதொடர்பாக போலீஸார் 11 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் … Read more

மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கு | இருவர் கைது; 1000 சவரன் நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருட்கள் மீட்பு

சென்னை: மயிலாப்பூரில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து சுமார் 1000 சவரன் தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த ஶ்ரீகாந்த் (60) மற்றும் அவரது மனைவி அனுராதா (55), கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் … Read more

இடதுசாரி ஆட்சியின் கீழ் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்க்கும் மையமாக கேரளா – ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக பேரணி நிகழ்ச்சியில் கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெறுகிறது. அனைத்து மதத்தவர், இனத்தவரையும் சமமாக பாவிப்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் சித்தாந்தம். ஆனால் கேரளாவில் நடைபெறும் ஆட்சியோ வித்தியாசமாக உள்ளது. ஒரு சமூகத்தினருக்கு மட்டும் சிறப்பு சலுகை தரும் கேரள அரசு மற்றொரு சமூகத்தினருக்கு எதையும் செய்வதில்லை. இங்கு இஸ்லாமிய தீவிரவாதத்தை … Read more