வியட்நாமிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்பு படகுகள் வழங்கிய இந்தியா: ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார்

புதுடெல்லி: வியட்நாமில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு இந்தியா வழங்கும் கடன் உதவி திட்டத்தின் கீழ் 12 அதிவிரைவு பாதுகாப்பு படகுகளை இன்று (வியாழக்கிழமை) ஒப்படைத்தார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வியட்நாம் நாட்டின் ஹாய் ஃபாங்கில் உள்ள ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திற்கு இன்று (ஜூன்-9) சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை … Read more

“தென்னாடுடைய சிவனே போற்றி!” – நடராஜர் படத்தை பதிவிட்டு அண்ணமாலை ட்வீட்

சென்னை: “தென்னாடுடைய சிவனே போற்றி!” என்று நடராஜர் படத்தை பதிவிட்டு அண்ணமாலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்ய சென்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மே 23-ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் … Read more

நாட்றாம்பள்ளி அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: நாட்றாம்பள்ளி அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். க.மோகன்காந்தி தலைமையில், காணிநிலம் மு.முனிசாமி மற்றும் ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு நடத்தி பல்வேறு வரலாற்று தடயங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நாட்றாம்பள்ளி அருகே நடத்திய கள ஆய்வில் கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை ஆய்வுக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர். இது குறித்து பேராசிரியர் முனைவர்.க.மோகன்காந்தி கூறியதாவது, ”திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி … Read more

குஜராத் | தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார் ஷாமா பிந்து

அகமதாபாத்: குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். பாஜக தலைவர் ஒருவரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அவர் இந்து திருமணச் சடங்கு முறையைப் பின்பற்றினார். குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. 24 வயதான பிந்து , ”திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்தத் திருமணத்தை செய்து கொள்கிறேன்” என்று கூறி இருந்தார். இவரின் இந்த அறிவிப்புக்கு பல விமர்சனங்கள் … Read more

மலேசியாவில் சந்தேக மரணம்: சிவகங்கையில் பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மலேசியாவில் உயிரிழந்தவரின் உடலை சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த எம்.செந்திலா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”என் கணவர் மோகனசுந்தரம் பெரியகருப்பன். மலேசியாவில் பாண்டி என்பவர் நடத்தி வரும் கார் சுத்தம் செய்யும் கம்பெனியில் பணிபுரிந்தார். என் கணவர் 25.5.2022-ல் என்னிடம் வீடியோ காலில் பேசினார். அப்போது ஊருக்கு திரும்ப இருப்பதாகவும், ஆனால் பாண்டி ஊருக்கு அனுப்ப மறுப்பதாகவும் தெரிவித்தார். … Read more

கரோனா காலத்தில் 513 மாணவியருக்கு குழந்தைத் திருமணம்… உணர்த்துவது என்ன? – கே.பாலகிருஷ்ணன்

சென்னை: கரோனா காலத்தில் 513 மாணவியருக்கு திருமணம் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், குழந்தைத் திருமணம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர சில யோசனைகளை முன்வைத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் 513 மாணவியருக்கு குழந்தை மணம் நடந்துள்ள அதிர்ச்சிகரமான விபரம் பள்ளிக் கல்வி துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் 10 பேர், 8-ம் வகுப்பு மாணவியர். பாலின பாரபட்சத்திற்கு எதிரான தீவிர செயல்பாடுகளில் அவசியத்தை … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்: இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். முதன்முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி வரை இந்தப் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இப்போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியினை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு … Read more

3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து பூமிக்கு வந்த ரேடியோ சிக்னல்

பூமியில் இருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், அண்டத்தின் மற்றொரு விண்மீன் மண்டலத்திலிருந்து (Galaxy) வரும் விசித்திரமான ரேடியோ சிக்னல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வேறொரு விண்மீன் மண்டலத்திலிருந்து இவ்வாறான ரேடியோ சிக்னல் பூமிக்கு வருவது இது இரண்டாவது முறை என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ரேடியோ சிக்னலை FRB 20190520B என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.2019-ஆம் ஆண்டு மே மாதம், சீனாவில் உள்ள குய்சோவில், அபெர்ச்சர் ஸ்பெரிகல் ரேடியோ டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் இந்த சிக்னலை … Read more

ஒருநாள் திருப்பதி சுற்றுலாவுக்கு 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யவேண்டும்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கும் ஒருநாள் திருப்பதி சுற்றுலாவிற்கு செல்லும் பக்தர்கள், பயணம் செய்யும் நாளிலிருந்து 7 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையிலிருந்து திருமலை செல்ல விரும்பும் பக்தர்களுக்காக ஒருநாள் திருப்பதி சுற்றுலாவை தினசரி சென்னையிலிருந்து இயக்கி வருகிறது. தற்போது சுற்றுலா பயணிகளின் விவரங்களை இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமலை தேவஸ்தானத்தின் பிரதான சர்வரில் பதிவேற்றம் செய்யும் … Read more

காவல் துறை புகார் ஆணையம்: தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக காவல் துறை புகார் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. காவல் துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல் துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல் துறை சீர்த்திருத்த சட்டம் … Read more