'நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுங்கள்' – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மின்சார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியாமல் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து நிலக்கரி ரயில்களை … Read more

'கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம்' | தடுப்பு விதிகள் வகுக்கக் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: கல்வி நிறுவனங்களில் மதமாற்றங்கள் செய்யப்படுவதைத் தடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நடக்கிறது. எனவே கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதனைத் தடுக்க உரிய விதிகளை … Read more

என்ன செய்தார்கள் தமிழக எம்.பி.க்கள்? – மக்களவை உறுப்பினர்களின் செயல்பாடு; யார் முதலிடம்? 

சென்னை: மக்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை பிஆர்எஸ் இந்தியாவின் தரவுகளின்படி கடந்த 12 ஆண்டுகளாக மதிப்பிட்டு வரும் ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் 17வது மக்களவை தொடங்கியது முதல் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் வரை மதிப்பிட்டு விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும், பிரைம்பாயிண்ட் பவுண்டேஷன் மற்றும் பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளை செய்வு செய்து அறிக்கையாக வெளியிடுகிறது. மக்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக மாநில நிர்வாகியின் சகோதரரிடம் விசாரணை

கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக மாநில நிர்வாகியின் சகோதரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நீலகிரி மாவட்ட போலீஸார், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட10 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் … Read more

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறுவர்கள் சிறப்பு மருத்துவமனை: முதல்வர் ஜெகன்மோகன் அடிக்கல்

திருப்பதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதி வந்தார். ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ‘ஜெகனண்ணா வித்யா தீவனா’ எனும் அரசு கல்வி திட்டத்தின் பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர், மாணவியரின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 709 கோடி கல்விக் கட்டணத்தை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இனி 3 மாதத்திற்கு ஒரு முறை மாணவ, மாணவியர் கல்விக் கட்டணத்தை அரசு நேரடியாக அவரவர் பெற்றோர்களின் வங்கிக் … Read more

தஞ்சையில் 'ஷவர்மா' சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் மூவருக்கு வாந்தி, மயக்கம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் ஒரு மாணவி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த நிலையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தருமபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். … Read more

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி: தீவிரவாதிகளின் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டம் சக் ஃபக்கிரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ரகசிய சுரங்கப் பாதை ஒன்றை கண்டறிந்தனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்கு 150 மீட்டர் நீளத்துக்கு இந்த சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பிஎஸ்எப் டிஐஜி எஸ்.பி.எஸ்.சாந்து நேற்று கூறும்போது, “பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த சுரங்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளியேறும் பகுதி 2 அடி … Read more

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம்: 9 காவலர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக காவலர்கள் 9 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். சென்னையில் கடந்த ஏப்.18-ம் தேதி பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகிய இருவரும் வந்த ஆட்டோவை கெல்லீஸ் அருகே, காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் வந்த இருவரிடமும், காவல்துறையினர் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால், போலீஸார் அவர்களை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின்போது அவர்களிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து … Read more

கரோனா வைரஸ் தொற்று நீங்கிய பிறகு குடியுரிமை திருத்த சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் – அமித் ஷா உறுதி

சிலிகுரி: கரோனா தொற்று முடிவடைந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். மேற்கு வங்கத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிலிகுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாது என திரிணமூல் காங்கிரஸ் … Read more

உக்ரைன் மரியுபோல் நகரில் கடும் சண்டை – உருக்கு ஆலையை தகர்த்தது ரஷ்யா

கீவ்: உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நேற்று 71-வது நாளாக நீடித்தது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ரஷ்யா அறிவித்தது. எனினும் அந்த நகரில் உள்ள உருக்கு ஆலையில் சுமார் 2,000 உக்ரைன் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு நகரத்துக்கு ஒப்பான இந்த ஆலையின் கீழ் பல அடுக்கு பதுங்கு குழிகள் உள்ளன. உக்ரைன் வீரர்களோடு 1,000 அப்பாவி மக்களும் சிக்கியுள்ளனர். ஐ.நா. சபையின் தீவிர முயற்சியால் … Read more