இந்தியாவின் அன்றாட கரோனா பாதிப்பு மீண்டும் 3,500-ஐ கடந்தது

இந்தியாவின் அன்றாட கரோனா பாதிப்பு மீண்டும் 3,500 என்ற அளவைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான கரோனா தொற்று விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,545 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு 4,30,94,938 என்றளவில் உள்ளது. நாடு முழுவதும் 19,688 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,549 பேர் குணமடைந்தனர். இதுவரை 4,25,51,248 … Read more

ஐரோப்பிய தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய அன்பு பரிசுகள்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்துவருகிறது. இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யாவுடனான நட்பை முறிக்காமல், அதேநேரம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படாமல் இந்தியா திறம்பட காய்களை நகர்த்தி வருகிறது. இந்த சூழலில் ஐரோப்பா உடனான வர்த்தக, பாதுகாப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். … Read more

மக்களவை செயல்பாடுகளில் தமிழக அளவில் திமுக எம்பி.க்கள் செந்தில்குமார், தனுஷ்குமார் சிறப்பிடம் பெற்றனர்

சென்னை: மக்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை ப்ரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன், கடந்த 12 ஆண்டுகளாக மதிப்பிட்டு வருகிறது. அந்த மதிப்பீட்டின்படி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாகப் பணியாற்றிய எம்பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஃபவுண்டேஷன் சார்பில் 17-வது மக்களவையில் எம்பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அதன் நிறுவனர் ப்ரைம் சீனிவாசன் கூறியதாவது: மக்களவையின் செயல்பாடுகளை பிஆர்எஸ் இந்தியா என்ற அமைப்பு ஆராய்ச்சி செய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் … Read more

தடையை மீறி ஊர்வலம்: ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை

அகமதாபாத்: குஜராத்தில் வட்கம் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ.வாக இருக்கும் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ராஷ்ட்ரிய தலித் அதிகார் மஞ்ச் என்ற அமைப்பின் சார்பில் மெஹ்சானா என்ற இடத்தில் போலீஸார் தடையை மீறி ஊர்வலம் நடத்தினார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மெஹ்சானா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், போலீஸாரின் தடையை மீறி ஊர்வலம் சென்றதற்காக ஜிக்னேஷ் … Read more

'உலக மக்களின் நலனுக்காக ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும்' – ஐ.நா. பொதுச் செயலாளர் அறிவுறுத்தல்

உலக மக்களின் நலனுக்காக ரஷ்யா உடனடியாக உக்ரைனுடனான போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இதன் விளைவாக உலகம் முழுவதும் எரிபொருள் விலையேற்றம், சமையல் எண்ணெய் தட்டுப்பாடு, கோதுமை தட்டுப்பாடு இன்னும் பிற வர்த்தக, பொருளாதார சிக்கல்கள் உருவாகியுள்ளன. ரஷ்ய கோதுமை இறக்குமதியை நம்பியிருந்த ஏற்கெனவே வறுமையில் வாடும் எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் பல … Read more

பணி குறித்த அரசின் உத்தரவை எதிர்த்து ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்குத் தொடர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: பணி தொடர்பான விவகாரங்களில் அரசின் உத்தரவை எதிர்த்து ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்குத் தொடர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நில அளவைப் பணிகளை கிராம நிர்வாக அலு வலர்களும் மேற்கொள்வதற்கு அனுமதியளித்து கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர்கள் மத்திய சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், நில அளவைப் பணிகளை மேற் கொள்வதற்கு என நிபுணத்துவம் பெற்றுள்ள … Read more

சென்னையில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்

சென்னை: சர்வதேச அளவில் முக்கிய மருந்துத் தயாரிப்பு நிறுவனமான பைசர், கரோன தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் உலகளவில் 11 ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களைக் கொண்டிருக்கிறது. 12-வது ஆய்வு மையத்தை சென்னை ஐஐடி ஆய்வுப் பூங்காவில் அமைக்கிறது. ஆசியாவில் பைசர் அமைக்கும் முதல் ஆய்வு மையம் இதுவாகும். இந்த மேம்பாட்டு மையம் ரூ.150 கோடி செலவில், 61 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 250 அறிவியலாளர்கள், வல்லுநர்கள் … Read more

அரசியல் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்பதே இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்பு: அண்ணாமலை நேர்காணல்

இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்பது இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தொலைபேசி வாயிலாக சிறப்பு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்: உங்களுடைய திடீர் இலங்கை பயணத்துக்கான காரணம்…? இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை பல ஆண்டுகளாக எனக்கு இருந்தது. அதுவும், கட்சி … Read more

மேற்கு வங்க அரசின் பங்கு விற்பனையில் ஊழல் – காங்கிரஸ் மூத்த தலைவர் தொடுத்த வழக்கில் எதிர்த்து வாதாட சென்ற ப.சிதம்பரம் முற்றுகை

கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு எதிராக வாதாட சென்ற ப.சிதம்பரத்துக்கு எதிராக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த 2017-ல் மெட்ரோ டயரி நிறுவனத்தில் தனக்குள்ள 47% பங்குகளையும் கெவந்தர் அக்ரோ நிறுவனத்துக்கு மாநில அரசு ரூ.80 கோடிக்கு விற்றது. அடுத்த சில வாரங்களில் கெவந்தர் நிறுவனம் 15% பங்குகளை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.135 … Read more

கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கோவை, மதுரை, சேலம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகளின்மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் 6-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், … Read more