ட்விட்டர் சர்க்கிள் | குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ட்வீட்களை பகிரும் புதிய அம்சம்

சான் பிரான்சிஸ்கோ: பயனர்கள் தங்களது ட்வீட்களை குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே பகிரும் ‘ட்விட்டர் சர்க்கிள்’ என்ற புதிய அம்சத்தை சோதித்து வருகிறது சமூக வலைதளமான ட்விட்டர் தளம். உலகம் முழுவதும் சுமார் 76.9 மில்லியன் பயனர்கள் மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களுக்காக புதுப்புது அம்சங்களை ட்விட்டர் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிலையில், ‘ட்விட்டர் சர்க்கிள்’ என்ற புதிய அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் சோதித்து வருவதாக தெரிகிறது. ட்விட்டரை எலான் … Read more

5 வயது வரை இலவச பயணம், இருவழிப் பயணத்துக்கு 10% சலுகை… – தமிழக போக்குவரத்துத் துறையின் 15 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை, இயக்கூர்திகள் சட்டங்கள் – நிருவாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த போக்குவரத்துத்துறை, இயக்கூர்திகள் சட்டங்கள்-நிருவாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பயண கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குதல், பேருந்து முனையங்களில் … Read more

இறந்த தந்தையின் ஆசையை நிறைவேற்ற முஸ்லிம்கள் தொழுகை நடத்த நிலத்தை தானம் அளித்த இந்து சகோதரிகள்

ருத்ராபூர்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபூரில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு தங்களின் 20,424 சதுர அடி நிலத்தை, இந்து சகோதரிகள் தானம் அளித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபூர் அருகே பெயில்ஜுடி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தேலா ஆற்று பாலம் அருகே மசூதியை ஒட்டி, தொழுகை நடத்தும் மைதானம் (ஈத்கா) 4 ஏக்கரில் உள்ளது. இங்கு ரம்ஜான் உட்பட ஈத் பண்டிகை காலத்தில் சுமார் 20,000 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவர். இந்த இடத்துக்கு அருகே, லாலா … Read more

விக்கிப்பீடியாவில் பல திருத்தங்கள்… நீங்கள் படித்த பள்ளிதான் எது? – சுந்தர் பிச்சை அளித்த பதில்

கலிபோர்னியா: ‘நீங்கள் படித்த பள்ளி எது?’ என்று விக்கிப்பீடியா திருத்தங்களை மேற்கோள் காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார். தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டாக இயங்கி வருகிறது கூகுள். அதன் தலைமை செயல் அதிகாரியாக இயங்கி வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை. 49 வயதான அவர் படித்து, வளர்ந்தது தமிழ்நாட்டில்தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர். கடந்த 2004-இல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். … Read more

அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து விபத்துகள் குறைந்துள்ளன: தமிழக அரசு தகவல் 

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து விபத்துகள் குறைந்துள்ளதாக போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை, இயக்கூர்திகள் சட்டங்கள் – நிருவாகம், சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், மதிவேந்தன், தங்கம் தென்னரசு ஆகியோர் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு … Read more

தலாக் நடைமுறைக்கு தடை, அனைவருக்கும் ஒரே மாதிரியான விவாகரத்து – உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண் மனு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசிர் ஹீனா, வழக்கறிஞர் அஷ்வனி குமார் துபே மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு கூறியிருப்பதாவது: முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை ஒரு மாதத்துக்கு ஒரு முறை வீதம் 3 மாதங்களுக்கு தலாக் (தலாக்-இ-ஹசன்) எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது. இதன்படி எனது கணவர் என்னை விவாகரத்து செய்தார். எனது குடும்பத்தினர் வரதட்சணை கொடுக்க முடியாததே இதற்குக் காரணம். மேலும் எனது … Read more

மனிதனை மனிதன் தூக்கி சுமப்பது மாண்பாக இருக்காது: சீமான்

சென்னை: மனிதனை மனிதன் தூக்கி சுமக்க சொல்வது மாண்பாக இருக்காது, அது மதிப்பிற்குரியவர்கள் செய்கின்ற செயலாக இருக்காது என்று நினைக்கிறேன், என்னைப் பொருத்தவரை பட்டினப்பிரவேசம் என்பதே தவறு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” மனிதனை மனிதன் சுமப்பது இழிவு என்றுதான் பல நாட்களாக நாம் பேசி வருகிறோம். அது மானுட விசயத்தில் ஒவ்வாது. … Read more

2 ஆண்டுக்கு பிறகு ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி அதிகரிக்கும்

புதுடெல்லி: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டுவந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதைச் சமாளிக்கும் நோக்கில் ரெப்போ விகித்தை 0.40 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் தற்போது ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் தாங்கள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் … Read more

ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை: உறுதி அளித்த மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை பரிசீலிக்கப்படுமென உறுதி அளித்த மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: ”2023-இல் இருந்து ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளமைக்காக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு நன்றி. இனி வரும் காலங்களில், எந்தச் சூழ்நிலையிலும் ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் … Read more

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு டெல்லியில் இலவச பஸ் பாஸ் அறிமுகம்

புதுடெல்லி: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு நேற்று தொடங்கியது. டெல்லி தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுமானத் தொழிலாளர்கள் சிலருக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இலவச பஸ் பாஸ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பயன் அடைவர். டெல்லியில் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் … Read more