காங்கிரஸுக்கு எதிராக வாதாடுவதா? – கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு சொந்த கட்சியினர் போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜரான ப. சிதம்பரத்தை அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேற்கு வங்கத்தில் மெட்ரோ டைரி நிறுவனத்தின் பங்குகளை அம்மாநில அரசு தனியார் நிறுவனத்துக்கு விற்றதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகாரை கையில் எடுத்து மேற்குவங்க காங்கிரஸ் கட்சி … Read more

மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் தேர்வு: முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு

சென்னை: தமிழக மின்துறை தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கடந்த மார்ச் 18 முதல், உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. மேலும், நாளை (மே 6) முதல் உறுப்பினர் (சட்டம்) பதவி காலியிடம் ஏற்பட உள்ளது. இந்த இரு பதவிகளையும் நிரப்ப, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில், தலைமைச் செயலர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவரை உறுப்பினர்களாக கொண்ட தேர்வுக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. … Read more

‘‘மக்கள் பலி; உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்’’- பிரான்ஸில் பிரதமர் மோடி- மேக்ரான் கூட்டறிக்கை

பாரிஸ்: பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை அதிபர் மேக்ரான் அதிபர் மாளிகை வாசல் வரை வந்து காத்திருந்து அழைத்துச் சென்றார். பிரதமர் மோடி 3 ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்றார். அந்நாட்டு பிரதமர் ஒலிப் ஸ்கால்சை சந்தித்து பேசிய பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அடுத்த கட்டமாக அங்கிருந்து டென்மார்க் சென்ற பிரதமர் மோடி,அந்நாட்டு பிரதமர் பிரடெரிக்சன் சந்தித்து பேசினார். தொடர்ந்து கோபன்ஹேகன் நகரில் உள்ள கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனையில் நடைபெற்ற, 2வது இந்தியா- நார்டிக் … Read more

கச்சத் தீவுக்கு அனுமதி சீட்டு இன்றி சென்றுவர இலங்கையிடம் கோரிக்கை – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

சென்னை: தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடந்த மாதம் 30-ம் தேதி இலங்கை சென்றார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, இலங்கை பயணம் குறித்து அண்ணாமலை கூறியதாவது: கடந்த 4 நாட்களாக இலங்கைக்கு சென்று அங்குள்ள மலையகத் தமிழ் மக்களைச் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கை அதிபருக்கு அளிக்கும் மரியாதையை பிரதமர் மோடிக்கு அங்குள்ள மக்கள் அளிக்கிறார்கள். … Read more

தாஜ்மகாலை புனிதப்படுத்துவதாக அறிவித்த அயோத்தி துறவி கைது

புதுடெல்லி: அயோத்தியில் ராம் ஜானகி மடத்தின் தலைவர் துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது இரண்டு சீடர்களுடன் ஏப்ரல் 27-ல் ஆக்ரா வந்திருந்தார். இவர், இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் அமைத்து, முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற வலியுறுத்தி இரு முறை அயோத்தியில் உண்ணாவிரதமும் இருந்தவர். பரமஹன்ஸுக்கு, தம் கையிலிருந்த இரும்பாலான பிரம்ம தண்டத்துடன் தாஜ்மகால் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அயோத்திக்கு திரும்பியவர் இன்று (மே 5) தாஜ்மகாலினுள் சாதுக்கள் சபையை நடத்தி, அதை புனிதப்படுத்த உள்ளதாக … Read more

உக்ரைனில் ஆயுத விநியோகத்துக்கு பயன்படுத்திய 6 ரயில் நிலையங்களை தகர்த்தது ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் படைகளுக்கு ஆயுத விநியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 6 ரயில் நிலையங்களை குண்டுவீசி சேதப்படுத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தது. அப்படி நேட்டோவில் சேர்ந்தால், அது தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா கூறியது. மேலும், நேட்டோவில் சேர கூடாது என்று உக்ரைனை ரஷ்யா தொடர்ந்து எச்சரித்து வந்தது. அதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கவில்லை. இதையடுத்து உக்ரைன் மீது போர் … Read more

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

சென்னை: கோடை வெயில் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்று (மே 5) தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 9-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மே 2 முதல் 4-ம் … Read more

ஆந்திராவில் வினாத்தாள் கசிவு: 25 அரசு ஆசிரியர்கள் கைது

ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாள் முதல் நேற்று வரை ஆந்திர மாநிலத்தில் பல மாவட்டங்களில் வினாத்தாள்கள் சிறிது நேரத்திலேயே கசிந்தன. வினாத்தாள் வழங்கிய சில நிமிடங்களிலேயே தெலுங்கு, ஆங்கிலம், கணக்கு போன்ற பாட வினாத்தாள்கள் கசிந்தன. தேர்வு மைய கண்காணிப் பாளர்களாக இருந்த ஆசிரியர்கள் சிலர் செல்போனில் வினாத் தாள்களை படம் எடுத்து அதனை வெளியில் உள்ள சிலருக்குஅனுப்பியுள்ளனர். அவர்கள் பதிலுக்கு விடையை புகைப்படம் எடுத்து … Read more

டென்மார்க்கில் நார்வே பிரதமருடன் மோடி சந்திப்பு: ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கோபென்ஹேகன்: நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோரை, டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகன் நகரில் பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இருதரப்பு உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களில் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லினிலிருந்து நேற்று முன்தினம் டென்மார்க் சென்றார். அங்கு நடந்த இந்தியா – நார்டிக் (வடக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு அட்லான்டிக் நாடுகள்) 2வது உச்சி … Read more